டேக் இட் பாலிசிதான் நம்ம ஸ்டைல் - சொல்கிறார் ஓவியா

சென்னை: நான் அனைத்து விஷயங்களையும் எளிதாக எடுத்துக்கொள்வேன். ஒரு குழந்தையை போல் இருக்க தான் ஆசைப்படுவேன் என்று கத்தாரில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை ஓவியா தெரிவித்தார். மேலும், எதற்கு கவலை பட வேண்டுமோ அதற்கு கவலை பட்டால் மட்டுமே போதுமானது. எல்லாவற்றிருக்கும் கவலைப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் மிகவும் ஹாட்டான ஹீரோயின் என்றால், அது நயன்தாரா என்றும், கூலானா ஒரு ஹீரோயின் என்றால் அது திரிஷா என்று வெளிப்படையாக கூறினார்.

I will take everything an easy-Actress Oviya

இந்திய சினிமா உலகளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் உலகளவில் தென்னிந்திய சினிமாவின் உரிமையை கொண்டாடும் வகையில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் சிறந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

2019ஆம் ஆண்டிற்கான சைமா (SIIMA) விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அந்த வகையில், அனைத்து தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஓவியா.

ஆனால், பாதியிலேயே போட்டியிலிருந்து சில காரணங்களால் வெளியேறினாலும் ஓவியா ஆர்மி என்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் பின்னால் சுற்ற வைத்தவர். களவாணி, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் ஓவியா. அவர் மிகவும் கூலான ஒரு நடிகை என்பது அனைவரும் அறிந்ததே.

ஓவியா சைமாவில் கலந்து கொண்ட பிரபலங்களில் ஒருவராவார். அப்போது அவர் பேசுகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் பல பேரை சந்திக்க முடியும். ஒரு பாரம்பரியமான குடும்பத்தின் பின்னணியில் இருந்து வருவதால் ட்ரெடீஷனல், கூல் என அந்தந்த இடத்திற்கு ஏற்ற மாதிரி மாறிக்கொள்வேன்.

நான் அனைத்து விஷயங்களையும் எளிதாக எடுத்துக்கொள்வேன். ஒரு குழந்தையை போல் இருக்க தான் ஆசைப்படுவேன். எதற்கு கவலை பட வேண்டுமோ அதற்கு கவலை பட்டால் மட்டுமே போதுமானது. எல்லாவற்றிருக்கும் கவலைப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

தமிழ் சினிமாவில் மிகவும் ஹாட்டான ஹீரோயின் என்றால், அது நயன்தாரா என்றும், கூலானா ஒரு ஹீரோயின் என்றால் அது திரிஷா என்றும் கூறினார். ஓவியா சொன்னது போல் ஹாட்டான நடிகை என்றால் அதில் முன்னிலையில் இருப்பது நயன் தாரா மட்டுமே.

சாஃப்ட்டான, பெரிதாக அலட்டிக்கொள்ளாத கூல் நடிகைகளில் முதலிடம் திரிஷாவிற்கு தான். ஆனால் கூல் என்றால் அது ஓவியாவும் கூடத்தான். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய உடன் பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் அவரின் ஒரு சில டயலாக்குகள் மிகவும் பிரபலம். குறிப்பாக ஸ்பிரே அடிச்சுடுவேன், கோகனட் கோகனட், கொக்கு இட்ட முட்ட நட்டு பாடல் மூலம் குழந்தைகள் மனதில் மிகவும் குடிகொண்டார்.

தற்போது அவர் பிஸியான ஒரு ஹீரோயின். அவரின் இந்த கூல் கேரக்டர் தான் அவரின் ஸ்பெஷல். அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல், ஆக்ட்டிங் உள்ளது என்றால் அதை மறுக்க முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X