சினிமா சான்ஸ் இல்லாவிட்டால் ஆபிசில் வேலை பார்ப்பேன்: லட்சுமி மேனன்
அழகும் திறமையும் கொண்ட நடிகை லட்சுமி மேனன் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கப் போவதில்லை, படிப்பையும் தொடரப் போவதாக கூறியுள்ளார்.
சினிமா உலகம் கைவிட்டாலும் படிப்பு கைவிடாது. நடிக்க சான்ஸ் இல்லாமல் போனாலும் படிப்பை வைத்து அலுவலகத்தில் வேலை பார்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பாஸ் செய்துள்ள லட்சுமி மேனன் தற்போது ப்ளஸ் ஒன் படிப்பில் சேர்ந்துள்ளார். நடிப்பில் கவனம் செலுத்தலாமே என்று கேட்டதற்குத்தான் இப்படி கருத்து கூறியுள்ளார் லட்சுமி மேனன்.

14 வயது சிறுமி
கும்கி படத்திற்காக கேரளாவிலிருந்து லட்சுமிமேனனை பிரபுசாலமன் அழைத்து வந்தபோது அவருக்கு பதினான்கு வயசுதான். ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாராம். அந்த படத்தை முடித்து விட்டு சுந்தரபாண்டியனில் நடித்தபோது பத்தாம் வகுப்பு படித்த லட்சுமிமேனன். இப்போது தேர்விலும் பாசாகி விட்டார்.

சூப்பர் ஹிட் நாயகி
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என மூன்று ஹிட் படங்களை கொடுத்துள்ளார் லட்சுமி மேனன். இப்போது அவர் கைவசம் மஞ்சப்பை, சிப்பாய், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, வசந்தகுமாரன் ஆகிய படங்கள் கமிட்டாகியுள்ளன.

சம்பளம் கம்மிதான்
முதல் மூன்று படங்களிலுமே பாவாடை தாவணி அணிந்த பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் லட்சுமிமேனன். தற்போது நடிக்கும் பாண்டியநாடு, மஞ்சப்பை படங்களிலும் அதே கெட்டப்தானாம். எனவே இவருக்கு குறைந்த சம்பளம்தான் கிடைக்கிறதாம்.

ப்ளஸ் ஒன் படிப்பு
நடிப்போடு படிப்பையும் தொடர உள்ளார் லட்சுமி மேனன். காரணம் கேட்டால் இப்போதைக்கு சினிமா வாய்ப்புகள் திருப்தியா இருக்கு. ஆனா அடுத்த வருசம் எப்படி இருக்குமோ சொல்ல முடியாது என்கிறார்.

கவர்ச்சி ஒத்துவராது
நான் கவர்ச்சியெல்லாம் காட்டி நடிக்க மாட்டேன். அதனால் நானெல்லாம் சினிமாவுல ரொம்ப நாள் தாக்குப்பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால், இப்போதும் நடித்துக்கொண்டே படிப்பையும் தொடரப்போகிறேன்.

ஆபிஸ் வேலை
இரண்டு வருடம் கழித்து எனக்கு படவாய்ப்பு இல்லையென்றால், கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஏதாச்சும் ஆபீஸ்ல போய் வேலை செய்வேன். இப்ப சினிமாவை நம்பி படிப்பை விட்டால் சினிமா வாய்ப்பு இல்லையென்றால் படிப்பறிவு இல்லாத நான் வீட்டில் உட்கார வேண்டும் என்கிறார் லட்சுமிமேனன்.


Click it and Unblock the Notifications











