கல்யாணத்திற்கு முன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்... இது ஸ்ருதிஹாசனின் ஆசை
சென்னை: தனது தாய், தந்தையைப் போலவே சமூக வரையறைக்குள் சிக்க விரும்பவில்லை என்றும், திருமணத்திற்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
திரையுலகப் பிரபலங்களான கமல் -சரிகா தம்பதியினரின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். நடிகை, இசையமைப்பாளர், பாடகி எனப் பன்முகத் திறமையாளரான ஸ்ருதி, தற்போது தமிழில் விசாலுடன் பூஜை என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஸ்ருதி. அதில், அவர் தனது பெற்றோர் மற்றும் எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

அழகான குடும்பம்...
ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.

சந்தோஷமான குடும்பம்...
ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

சமூக வரையறைகள்...
தாய்-தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை.

பர்ஸ்ட் குழந்தை தான்...
திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தந்தையைப் போலவே...
தன் தந்தையைப் போலவே மனதில் தோன்றியதை ஒளிவு மறைவின்றி பட்டென உடைத்துப் பேசும் ஸ்ருதியின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











