குஷ்பு சொன்னதை நான் ஏத்துக்கவே மாட்டேன்: ஹன்சிகா

By Siva

சென்னை: நான் அவரை விட சிறந்த நடிகை என்று குஷ்பு கூறியதை ஏற்றுக் கொள்ள மாட்டேன், அவர் தான் சிறந்த நடிகை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

(அரண்மனை கேலரி)

பார்க்க புஸு, புஸுன்னு இருக்கும் ஹன்சிகா கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் கையில் தற்போது 8 படங்கள் உள்ளன. ஹன்சிகாவை பலரும் சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில் குஷ்பு சின்ன குஷ்புவுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம். இது குறித்து ஹன்சிகா கூறுகையில்,

குஷ்பு மேடம்

குஷ்பு மேடம்

நான் குஷ்பு மேடத்தின் கணவர் இயக்கத்தில் நடிப்பதால் நானும் அவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். சுந்தர். சி சாருடன் 3 படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளேன்.

எங்கேயும் காதல்

எங்கேயும் காதல்

எங்கேயும் காதல் படத்தை பார்த்தபோது தான் குஷ்பு மேடம் முதல்முறையாக எனக்கு போன் செய்து பேசினார். அவர் பெரிய நடிகை என்பது எனக்கு அப்போது தெரியாது.

ஹாய் ஹன்சிகா

ஹாய் ஹன்சிகா

ஹாய், ஹன்சிகா நான் குஷ்பு பேசுகிறேன். உங்களின் எங்கேயும் காதல் படத்தை பார்த்தேன். நீங்கள் படங்களை பார்த்து தேர்வு செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அதன் பிறகு ரசிகர்கள் என்னை குஷ்பு மேடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தனர்.

அறிவுரை

அறிவுரை

மக்கள் என்னையும், உங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அவர்கள் உங்களை யாருடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உங்களுக்கு என்று ஒரு பெயரை பெற வேண்டும். நீங்கள் என்னைவிட சிறந்த நடிகை என்றார் குஷ்பு.

அரண்மனை

அரண்மனை

நான் அவரை விட சிறந்த நடிகை என்று குஷ்பு கூறியதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவர் தான் சிறந்த நடிகை. அரண்மனை படத்தை பார்த்த பிறகு அவர் எனக்கு போன் செய்து நான் சூப்பராக நடித்திருப்பதாக தெரிவித்தார் என்றார் ஹன்சிகா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X