சூர்யாவுடன் ஜோடி சேர ஆசை: ஈரான் நடிகை விருப்பம்
சென்னை: நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடக்க வேண்டும் என்று ஈரானின் கவர்ச்சி நடிகை மர்யம் ஸகாரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதற்காக ஈரானை சேர்ந்த மரியம் ஸகாரியா என்ற நடிகை ஒப்பந்தம் ஆனார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'சூர்யாவுடன் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது' என்றார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது,

கரீனா கபூருடன் ஆட்டம்
இந்தியில் தில் மேரா என்ற பாடலுக்கு கரீனா கபூருடன் ஏஜென்ட் வினோத் படத்தில் ஆடினேன். தமிழில் ஏற்கனவே நகரம் என்ற படத்தில் குத்தாட்டம் ஆடி இருக்கிறேன்.

சோர்வே தெரியவில்லை
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் குத்தாட்டம் ஆட கேட்டார்கள். சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சூர்யா என்னிடம் மிகவும் நட்புடன் பழகினார். அவருடன் ஆடியபோது வேலை செய்கிறோம் என்ற சோர்வே தெரியவில்லை.

நடனம் ஆடுவதில் தான் ஆர்வம்
ஏற்கனவே பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். இப்படத்தில் அவரது சகோதரர் ராஜு சுந்தரத்துடன் பணியாற்றினேன். நான் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகை, நடனம் ஆடுவதில்தான் ஆர்வம்.

ஜோடி சேர ஆசை
ஆனால் சூர்யாவுடன் ஆட்டம் போட்டபோது அவருடன் ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசையும் வந்துவிட்டது. இவ்வாறு மரியம் ஸகாரியா கூறினார்.


Click it and Unblock the Notifications











