Don't Miss!
- Sports
தோனியிடம் இனி கற்க ஒன்றுமே இல்லை.. ஹோட்டல் விட்டு ஹோட்டல் அழைகிறோம்.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
"எப்படி இத சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
'தலைவி' கங்கனா ரனவத்துக்கு இப்படி ஒரு ஆசையாம்... வெளிப்படையாகப் போட்டுடைத்த 'அம்மா கணக்கு' டைரக்டர்
Recommended Video
மும்பை: நடிகை கங்கனா ரனவத்தின் வாழ்க்கைக் கதை பற்றி இயக்குனர் அஸ்வினி ஐயர் புதிய தகவலைத் தெரிவித்துள்ளார்.
தமிழில் தனுஷ் தயாரிப்பில், அமலா பால் நடித்த, அம்மா கணக்கு படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். மும்பையை சேர்ந்த இவர், இந்தி படங்களை இயக்கி வருகிறார்.
இவர் இப்போது இயக்கியுள்ள படம், பங்கா. இதில் கங்கனா ரனவத், ஹீரோயினாக நடித்துள்ளார்.
அடப்பாவமே.. அவருக்கு இப்படியொரு நோயாமே.. வெறுப்பில் போஸ்ட் செய்துவிட்டு உடனே டெலிட் செய்த ஹீரோயின்

தலைவி படத்தில்
ஜெஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை கங்கனா தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான தலைவி படத்தில் நடித்துவருகிறார். இதை விஜய் இயக்குகிறார். இதில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உட்பட பலர் நடித்துவருகின்றனர்.

கங்கனாவின் வாழ்க்கை
இந்நிலையில் கங்கனாவின் வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு வந்தால் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார் அஸ்வினி ஐயர். அவர் கூறும்போது, அவர் வாழ்க்கையில் இன்னும் பல்வேறு விஷயங்கள் நடக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக கல்யாணம். அதற்கு பிறகு அவரது வாழ்க்கை கதையை படமாக்குவது பற்றி யோசிக்கலாம்.

கங்கனா வெர்சஸ் கங்கனா
கங்கனாவுக்கு அவர் கதையை அவரே படமாக இயக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் இயக்குவேன். படத்துக்கு ஒருவேளை கங்கனா வெர்சஸ் கங்கனா என்று கூட டைட்டில் வைக்கலாம். ஒரு நடிகையாக கங்கனாவை எனக்குப் பிடிக்கும். எதையும் முகத்துக்கு நேராகப் பேசிவிடுவார். உண்மையைச் சொல்பவர்.

யாருக்கும் தெரியாது
அவர் மீது எனக்கு மரியாதை இயக்குகிறது. மனிதாபிமான அடிப்படையில் பல நல்ல விஷயங்களை அவர் செய்து வருகிறார். அதுபற்றி யாருக்கும் தெரியாது. அதை தெரியப்படுத்த அவர் விரும்புவதில்லை. அவரது மணிகர்ணிகா பட பிரச்னையின் போது அவ என்ன பிரச்னையில் இருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

பொருட்படுத்தவில்லை
அவரும் நானும் ஒரு விஷயங்களில் ஒன்றாக இருக்கிறோம். உலகம் என்ன நினைக்கிறது என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. எனது அடுத்தப் படம் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. விரைவில் அதற்கான வேலைகளை தொடங்க இருக்கிறேன். அதில் யார் நடிக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை என்றார்.