குளிர், இருமல், மூச்சித்திணறல் எல்லாமே எனக்கு இருந்தது, ஆனா.. பிரபல நடிகையின் ஆரோக்ய அட்வைஸ்!

By

சென்னை: குளிர், இருமல், சுவாச பிரச்னை எல்லாம் தனக்கு இருந்தது என்று கூறியுள்ள பிரபல நடிகை அட்வைஸ் செய்துள்ளார்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றன.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை வேகமாக நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

லாக்டவுன் விதிக்கப்பட்டும் இந்த வைரஸ் கட்டுக்குள் இல்லை. தமிழகத்திலும் இதனால் பதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வீட்டை விட்டு வெளியே யாரும் வரவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அதை மீறி மக்கள் வெளியில் சுற்றி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஜாலி கமென்ட்

ஜாலி கமென்ட்

இந்த லாக்டவுன் காரணமாக நடிகர், நடிகைகள், வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். வீட்டில் செய்யும் சமையல், ஒர்க் அவுட் போட்டோஸ் மற்றும் பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு அவர்களை பின் தொடரும் பாலோயர்கள் தங்கள் ஜாலி கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

நடிகை மீரா சோப்ரா என்கிற நிலாவும் தினமும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஏதாவது ஒரு போட்டோ அல்லது டிக்டாக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர், ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

சுவாசப் பிரச்னை

சுவாசப் பிரச்னை

'கடந்த 15 நாளாவே உடம்பு சரியில்லை. குளிர், இருமல், சுவாச பிரச்னையும் இருந்தது. ஒரே வாரத்துல குளிரும் இருமலும் போயிடுச்சு. ஆனா, சுவாசப் பிரச்னை போகலை. அதனால, கோவிட்-19 டெஸ்ட் பண்ணிக்கோயேன்னு சிலர் சொன்னாங்க. போனேன். எனக்கு நெகட்டிவ்தான். ஆனா, உங்களுக்கு சொல்றது ஒன்னே ஒன்னுதான். நிறைய வைட்டமின் இருக்கிற உணவுகளைச் சாப்பிடுங்க.

வாய்ப்பிருக்கு

வாய்ப்பிருக்கு

அது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். கொஞ்சம் உடல் நிலை சரியில்லைன்னாலும் உங்க நோய் எதிர்ப்பு சக்தி பலமிழந்திடும். அப்படி ஆயிடுச்சுன்னா, நீங்க கோவிட்-19 பாதிப்புக்கு சீக்கிரமா ஆளாக வாய்ப்பிருக்கு. அதனால எல்லாரும் வைட்டமின் இருக்கிற உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க. அதுதான் என் கோரிக்கை' என்று கூறியுள்ளார்.

வெயிட் லாஸ்

வெயிட் லாஸ்

இதற்கு ரசிகர்கள் பலர் அவருக்கு மருந்து மாத்திரைகளையும் அட்வைஸ்களையும் செய்துள்ளனர். ஒருவர், தயவு செய்து உங்களை பார்த்துக்கோங்க. கண்டிப்பாக வெளியே வராதீங்க. வெயிட் லாஸ் டயட்டைலாம் இந்த நேரத்துல கடைபிடிக்காதீங்க. அப்படி செஞ்சீங்கன்னா அன்பிரண்ட் பண்ணிருவேன் என்று செல்லமாகக் கூறியுள்ளார்.

அன்பே ஆருயிரே

அன்பே ஆருயிரே

நடிகை மீரா சோப்ரா, தமிழில் அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர். அடுத்து, ஜாம்பவான், லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். சில காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X