Maamannan Audio Launch - நான் ஒரு கம்யூனிஸ்ட்.. மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் அதிரடி

சென்னை: Maamannan Audio Launch (மாமன்னன் இசை வெளியீட்டு விழா) மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷின் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் மெகா ஹிட்டானது. அப்படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தியும், நேர்மையும் இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் சிலர் முன் வைத்தனர்.

Iam A Communist Keerthy Suresh Speech in maamannan audio launch

மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. மாரி செல்வராஜும் அதனை ஒவ்வொரு பேட்டியிலும் உறுதிப்படுத்திவருகிறார்.

கவனம் ஈர்த்த சிங்கிள்கள்: எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்ற பிம்பம் மாமன்னன் படத்தின் மூலம் உடைந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்ற மலையிலதான் தீ பிடிக்குது ராசா பாடலும், ஜிகு ஜிகு ரயில் பாடலும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மலையிலதான் பாடலை வடிவேலு அட்டகாசமாக பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜூன் 1ஆம் தேதி பிரமாண்டமாக நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா ஜூன் ஒன்றாம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது என அறிவித்திருந்தார்.

Iam A Communist Keerthy Suresh Speech in maamannan audio launch

குவிந்த பிரபலங்கள்: அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் தவிர படக்குழுவினரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், " நீண்ட நாள் கழித்து தமிழில் எனக்கு ஒரு ரிலீஸ். பெரிய டீமுடன் வேலை பார்த்திருக்கிறேன். படம் வேற மாதிரி இருக்கும். படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட். வித்தியாசமான படமாக எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

ஜாலிதான்: பொதுவான ஒரு விஷயத்தைப்பற்றிதான் பேசியுள்ளோம். எல்லோராலும் கனெக்ட் பண்ண முடியும். ஃபஹத் பாசிலுடன் எனக்கு காம்பினேஷன் குறைவு. உதயநிதி, வடிவேலுவுடன் இணைந்து நடித்தது ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய டேக் போனோம். நிறைய சிரித்துக்கொண்டே இருந்தோம். ஜாலியான பயணமாக இருந்தது. ஆனால் படம் அப்படியிருக்காது. சீரியஸான படமாக இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X