நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்

By Siva

சென்னை: தான் மது அருந்துவது போன்ற காட்சி இடம்பெற்றால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

சமர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் ஹீரோ விஷால், ஹீரோயின் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தில் த்ரிஷா மது அருந்தும் காட்சி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு த்ரிஷா கூறுகையில்,

நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.

உடனே செய்தியாளர்கள் மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

அப்ப மங்காத்தா ஹிட்டானதற்கு த்ரிஷா தண்ணியடிச்ச சீன் தான் காரணமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X