நான் ஓட்டு போட்டா நோட்டாவுக்கு தான்: நடிகை கல்கி கொச்லின்
மும்பை: இம்முறை வாக்களித்தால் நோட்டாவுக்கு தான் என்று பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திரை நட்சத்திரங்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை கல்கி கொச்லினிடம் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில்,

நோட்டா
இம்முறை நான் வாக்களித்தால் அது நோட்டாவுக்கு தான் என்று உறுதியாகத் தெரிவித்தார் கல்கி.

ரொமான்ஸ்
கல்கிக்கு ரொமான்ஸ், காமெடி என்று அனைத்து வகையான படங்களிலும் நடிக்க பிடிக்குமாம். இருப்பினும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க மிகவும் பிடிக்குமாம்.

பாலிவுட்
கடினமாக உழைக்க தாயாராக இருந்தால் பாலிவுட்டில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தார் கல்கி.

பிடித்த இடம்
கல்கிக்கு பிடித்த இடம் ஊட்டி அருகே உள்ள தனது தாய் வீடாம். செல்போன் டவர் கூட இல்லாத அந்த இடத்தில் அமைதியாக பொழுதை கழிக்க பிடிக்குமாம்.


Click it and Unblock the Notifications











