குட்டை பாவாடை, முத்தக்காட்சி.. என்னைக் குறி வைத்து தாக்குகிறார்கள்.. பிரபல நடிகை திடீர் பாய்ச்சல்!

By

மும்பை: தன்னை குறி வைத்து தாக்குகிறார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில் தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பிரபல இந்தி மற்றும் பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகள்.

இந்தப் படத்துக்குப் பிறகு அர்ஜுன் நடித்த அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை.

நடிகை ரைமா சென்

நடிகை ரைமா சென்

இந்தியில் கவனம் செலுத்தினர். அங்கு சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி ரைமா சென்னும் பிரபல நடிகை. அவர் தமிழில் அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச்சிறகுகள் படத்தில் இப்போது நடித்து வருகிறார்.

என்ன செய்தாலும்

என்ன செய்தாலும்

லாக்டவுன் காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. நடிகை ரியா சென், வெப்சீரிஸ்களில் நடித்துவருகிறார். ராகினி எம்.எம்.எஸ் ரிட்டர்ன், பாய்சன், மிஸ்மேட்ச் 2 ஆகிய வெப் சீரிஸ்களில் ஹாட்டாக நடித்துள்ள இவர், இப்போது பதி பத்னி அவுர் வோஹ் என்ற தொடரில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தான் என்ன செய்தாலும் அதை பிரச்னையாக்கி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

அவர் கூறும்போது, நான் குட்டை பாவாடை அணிந்தால், அதை பெரிய விஷயமாக்குவார்கள். சினிமா படங்களில் முத்தக்காட்சியில் நடித்தால், அதை போல்டான காட்சி, செம கிளாமர் என்று வர்ணிப்பார்கள். இதையே, சில முன்னணி ஹீரோயின்கள் செய்தால் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எனக்கு மட்டும் ஏனிந்த இந்த கிளாமர், போல்ட் இமேஜ்?

உண்மை இருக்காது

உண்மை இருக்காது

என்னை மட்டுமே தாக்குகிறார்கள். நான் குறி வைக்கப்படுகிறேன் என்பதை அறிவேன். எனக்கு சினிமாவில் பல நடிகர், நடிகைகள் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களும் இதையே கேட்கிறார்கள். நீங்கள் ஏன் குறி வைக்கப்படுகிறீர்கள் என்று. ஒவ்வொரு பட வெளியீட்டுக்கு முன்பும் என்னை பற்றி ஏதாவது செய்தி வரும். அதில் எந்த உண்மையும் இருக்காது.

குழந்தையை போல

குழந்தையை போல

அதனால் என் பெற்றோரும் இதுபற்றி கேட்க மாட்டார்கள். என் அம்மாவை பற்றியும் பல வதந்திகள் வந்திருக்கின்றன. என் அப்பா, அம்மாவை முழுமையாக ஆதரித்தார். இந்த வதந்திகளை என் அம்மா ஒரு குழந்தையை போல எளிதாக கடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். அதனால் நானும் அதை அப்படியே எதிர்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X