For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் சென்னை பொண்ணு.. தமிழ் என் அடையாளம்.. இந்தியில் நடிச்சாத்தான் நடிகர்களா? ஸ்ருதி ஹாசன் சுளீர்

  |

  சென்னை: இந்தி படத்துல நடிச்சாத்தான் நடிகர்களா? என்ற கேள்வியை நடிகை ஸ்ருதி ஹாசன் கேட்டுள்ளார்.

  இந்த லாக்டவுன் காலத்தில் தனது இசைத் திறமையை வளர்த்து வரும் அவர், இங்கிலாந்தில் உள்ள அவரது இசைக் குழுவுடன் சேர்ந்து EDGE எனும் இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.

  தமிழில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லாபம் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கிடக்கிறார்.

  அந்தக் காட்சியில் அப்படி நடித்த வாணி போஜன்.. அடித்த ஜாக்பாட்.. யாருக்கூட ஜோடின்னு பாருங்க!அந்தக் காட்சியில் அப்படி நடித்த வாணி போஜன்.. அடித்த ஜாக்பாட்.. யாருக்கூட ஜோடின்னு பாருங்க!

  நேரடியாக ஆன்லைனில்

  நேரடியாக ஆன்லைனில்

  தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிப்பில் உருவான யாரா படத்தில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். சமீபத்தில், அந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  அது ஒரு சாவி மட்டுமே

  அது ஒரு சாவி மட்டுமே

  அந்த படத்தின் விளம்பரத்திற்காக சில ஆன்லைன் போர்ட்டலுக்கு பேட்டி அளித்து இருந்தார் ஸ்ருதி ஹாசன். அவரிடம், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாகவும், பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் குறித்தும் கேள்வி எழுப்பினர். நடிகர் கமல்ஹாசனின் மகள் என்பதால், சினிமாவுக்குள் ஈஸியாத்தான் தான் நுழைந்ததாகவும், சினிமாவில் நுழைய அது வெறும் சாவி மட்டுமே, இங்கே திறமை இருந்தால் தான் நிலைக்க முடியும் என்று கூறியிருந்தார்.

  இசை ஆல்பம்

  இசை ஆல்பம்

  இந்த லாக்டவுன் நேரத்தில் புதிதாக எந்தவொரு படத்தின் ஷூட்டிங்கிலும் நடிக்க முடியாத நிலையில், வீட்டில் இருந்தபடியே தனது இசை திறமையை வளர்த்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். EDGE எனும் இசை ஆல்பத்தையே உருவாக்கி இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 8ம் தேதி அந்த பாடலை வெளியிடுகிறார் ஸ்ருதி ஹாசன்.

  இசை ஆர்வம் எப்படி வந்தது

  இசை ஆர்வம் எப்படி வந்தது

  பாடகராகவும், இசையமைப்பாளரகாவும் மாற உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது என்ற கேள்விக்கு? சின்ன வயசுல எங்கப்பா கமல்ஹாசன் ஒரு தடவை சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக கூட்டிட்டு போனாரு? அப்போ என்னை திடீர்ன்னு ஒரு பாட்டு பாட சொன்னங்க.. கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேர் முன்னிலையில் முதல் முறையா "அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே" பாடலை பாடினேன்.. அதற்கு கிடைத்த கைதட்டல் தான் பாடகியாக வேண்டும் என்றும் இசை மீதும் ஆர்வத்தை தூண்டியது" என்றார்.

  இந்தியில நடிச்சாத்தான் நடிகையா

  இந்தியில நடிச்சாத்தான் நடிகையா

  ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாலிவுட் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஏ.ஆர். ரஹ்மான் பாலிவுட்டை எல்லாம் தாண்டி போய்ட்டாருங்க.. அதை பத்தி மேலும் பேச விரும்பவில்லை. கடந்த ஒரு வருஷமா தமிழில் ஒரு படமும் தெலுங்கில் ஒரு படத்திலையும் நடிச்சிருக்கேன். ஆனால், பாலிவுட்டில் என்னை பார்ப்பவர்கள், ஏன் இப்பல்லாம் நீங்க நடிக்கிறதே இல்லை எனக் கேட்கிறாங்க.. இந்தி படத்துல நடிச்சாத்தான் நடிகையா? என சுளீரென கேட்டுள்ளார்.

  தமிழ் என் அடையாளம்

  தமிழ் என் அடையாளம்

  மேலும், தென்னிந்தியர் என்று தெரிந்த உடனே, உங்களுக்கு இட்லி, சாம்பார் பிடிக்குமா? என்று கேட்பதையே பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். பாலிவுட்டில் நிறைய படிச்சவங்க இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். வெளிநாட்டுல கூட இப்படி பிரிச்சு பார்க்குறது இல்லைங்க, திறமை இருக்கான்னு மட்டும்தான் பார்க்குறாங்க என்று கோபப்பட்ட அவர், நான் சென்னை பொண்ணு, தமிழ் என் அடையாளம். மற்ற மொழிகளில் வேலை செய்வது பிடிக்கும் என்பதால் செய்கிறேன் என்றார்.

  English summary
  Indian Actress Shruti Haasan boldly raise the questioned, if we act in Hindi films, only make us a actors? She was ready to release her music album EDGE soon.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X