ஆணாதிக்கவாதிகள் யாரும் என் படத்தை பார்க்க வேண்டாம்: அதிர வைத்த ஓவியா

By Siva

சென்னை: கலாச்சாரம் மீது நம்பிக்கையில்லாதவர்கள், ஆணாதிக்கவாதிகள் யாரும் தனது 90 எம்.எல். படத்தை பார்க்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் ஓவியா.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படம் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

படத்தில் ஓவியா தில்லான காட்சிகளில் நடித்துள்ளார்.

கஞ்சா

கஞ்சா

90 எம்.எல். ட்ரெய்லரை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஓவியா மது அருந்தியதுடன், கஞ்சா அடிக்கும் காட்சி, லிப் டூ லிப் காட்சியில் எல்லாம் நடித்திருந்தார். என்னம்மா ஓவியா இப்படி பண்றீங்களேம்மா என்று பலரும் அவரை விளாசினார்கள்.

கலாச்சாரம்

கலாச்சாரம்

ட்ரெய்லரை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டாம். படம் நன்றாக இருக்கும். உங்களின் கலாச்சாரம் மீது நம்பிக்கை இல்லை என்றாலோ அல்லது ஆணாதிக்கவாதியாக இருந்தாலோ என் படத்தை தயவு செய்து பார்க்காதீர்கள் என்று ஓவியா தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

90 எம்.எல். படத்திற்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்துள்ள நிலையில் ஓவியாவோ ஆணாதிக்கவாதிகள் யாரும் தனது படத்தை பார்க்க வேண்டாம் என்று கூறி அதிர வைத்துள்ளார். ஓவியாவிடம் இது எதிர்பார்த்தது தான்.

முன்மாதிரி

முன்மாதிரி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்நிலையில் அவர் இப்படி ஒரு படத்தில் நடித்துள்ளதால் தான் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றவர்களுக்காக இல்லை நான் எனக்காக வாழ்பவள் என்று ஓவியா பலமுறை தெரிவித்துள்ளார். அப்படிப்பட்டவர் மற்றவர்கள் என்ன விமர்சிப்பார்கள் என்றா கவலைப்படப் போகிறார்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X