ஃபேஷன் திருவிழா: அசத்தலாக ராம்ப் வாக் செய்த 'யம்மி மம்மி' ரவீனா டாண்டன்
மும்பை: மும்பையில் நடந்து வரும் இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் நடிகை ரவீனா டாண்டன் கலக்கலாக ராம்ப் வாக் செய்தார்.
இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் 2014 என்ற நகை திருவிழா மும்பையில் நடந்து வருகிறது. திருவிழாவின் முதல் நாள் பாலிவுட் நடிகைகள் தியா மிர்சா, சித்ரங்கடா சிங், நேஹா தூபியா, லிசா ரே உள்ளிட்டோர் டிசைனர் நகைகளை அணிந்து ராம்ப் வாக் செய்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்.

ரவீனா
இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை ரவீனா டாண்டன் தீப்தி மற்றும் அமிஷா ஆகிய டிசைனர்கள் வடிவமைத்த நகைகளை அணிந்து ராம்ப் வாக் செய்தார்.

உடை
ரவீனா தங்க நிற சீத்ரூ சேலை அணிந்து அதற்கு பச்சை நிற பிளவுஸ் அணிந்திருந்தார். அந்த உடை அவருக்கு அம்சமாக இருந்தது.

நகை
ரவீனா தலையில் ஒரு நெக்லஸை நெத்திச்சுட்டி போன்று அணிந்திருந்தார். மேலும் கழுத்தில் பல நெக்லஸ்களை அணிந்திருந்தார்.

பிராண்ட்
ரவீனா அணிந்திருந்த நகைகள் தந்தையின் கண்களுக்கு தேவதையாக தெரியும் மகள்களுக்கு மற்றும் குடும்பத்தின் கௌரவமாக இருக்கும் மருமகள்களுக்கும் பரிசாக அளிக்கும் நகைகள் ஆகும்.


Click it and Unblock the Notifications











