ரூ 1.5 கோடி சம்பளம்: இலியானா ரொம்ப 'காஸ்ட்லி'!

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இலியானா. தமிழில் அவர் அறிமுகமான கேடி படத்துக்குப் பிறகு நடிக்கும் தமிழ்ப் படம் இதுதான். இந்தியில் ஹிட்டான அமீர்கானின் '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் இது.
இதில் நடிக்க இலியானா ரூ 2 கோடி சம்பளம் கேட்டிருந்தார். இப்போது அதிலிருந்து ரூ 50 லட்சம் குறைத்துக் கொண்டு ரூ. 1.5 கோடி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட தென்னிந்திய கதாநாயகிகள் யாருக்குமே இப்போது பெரிய தொகை வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்குப் பிறகு அவரை ரூ 1.75 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்ய தெலுங்குப் படத் தயாரிப்பாளர் ஒருவர் தயாராக உள்ளாராம்.
மேலும், இந்திப் படமொன்றிலும் நடிக்க இலியானாவிடம் பேசி வருகிறார்களாம். அது உறுதியானால், சம்பளத்தை ரூ 2 கோடியாக உயர்த்திவிடத் தயாராக உள்ளாராம் இலியானா.
படம் வெற்றி பெற்றால் அவர் கேட்கும்முன்பே உயர்ந்துவிடாதா சம்பளம்!


Click it and Unblock the Notifications











