காதல் தோல்வியால் மனஅழுத்தம்.. மோசமான வியாதியால் பாதிக்கப்பட்ட விஜய்பட நாயகி.. பெட்ரூமில் சிசிடிவி?
தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக சந்தேகிப்பதாக இலியானா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இலியானா. அந்த படம் பெரிதாக போகவில்லை என்பதால், தமிழில் அவருக்கு தொடர்ந்து படங்கள் வரவில்லை. இதையடுத்து தெலுங்கு பக்கம் போனார். அங்கும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
நண்பன் படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆனார். ஆனால் அந்த படத்திற்கு பிறகும் தமிழில் பெரிய பட வாய்ப்புகள் எதுவும் வராததால், பாலிவுட்டில் நிரந்தரமாக முகாமிட்டுள்ளார்.

காதல் முறிவு
இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை இலியானா காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாட்களாக டேட் செய்து வந்த நிலையில், திடீரென சமீபத்தில் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பூடகமாக தெரிவித்திருந்தார்.
தூக்கத்தில் நடக்கும் வியாதி
இந்நிலையில் தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக இலியானா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் பக்கத்தில் அவர், " எனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது என நினைக்கிறேன். இல்லை என்றால் தினமும் நான் காலையில் எழும் போது எனது காலில் எப்படி காயங்கள் இருக்கும்", என குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் கவலை
இலியானாவின் இந்த பதிவை பார்த்து அவரது ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். பெட்ரூமில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கும் படி இலியானாவுக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அதேபோல் மோஷன் சென்சார் கருவியை பொருத்தினாலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவரை பாருங்கள்
உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்சினைக்கு தீர்வுகாணும்படி சில ரசிகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தூங்கப் போகும் முன் வால்நட் சாப்பிடும் படி சிலர் டிப்ஸ் கொடுத்துள்ளனர். மேலும் பல ரசிகர்கள் தூங்கி எழும் போது எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











