twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விலங்கு தோல் ஆடைகளுக்கு தடா! ‘பெடா’விற்காக அரை நிர்வாண போஸ் கொடுத்த இலியானா

    By Mayura Akilan
    |

    மும்பை: விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் தடா சொல்வோம் என்று சமீபத்தில் ‘பெடா' அமைப்பில் இணைந்த இலியானா கூறியுள்ளார்.

    விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கப் போராடும் அமைப்பு பெடா. இந்த அமைப்பின் சார்பில் ‘விலங்குகளைத் துன்புறுத்தாதீர்கள்; சர்க்கஸுக்கு விலங்குகளைப் பயன்படுத்தாதீர்கள்' என்று ஹேமமாலினி, திரிஷா, தமன்னா என பல நடிகைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பெடா வின் லேட்டஸ்ட் தூதுவராக இணைந்துள்ளார் இடுப்பழகி இலியானா. சமீபத்தில் இந்த அமைப்புக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்து வாய் பிளக்க வைத்துவிட்டார் இலியானா. அதற்கும் நியாயமான காரணத்தையும் கூறி வருகிறார் இலியானா.

    அங்கோரா ரோமம் என்பது ஒரு வகை முயல் மற்றும் பூனை வகைகளைச் சேர்ந்த ரோமம். இதிலிருந்துதான் ஸ்வெட்டர், கம்பளி, ஸ்கார்ஃப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

    அரை நிர்வாண போஸ்

    அரை நிர்வாண போஸ்

    இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துத்தான், பெடா அமைப்பு செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் இலியானா. புகைப்படத்தின் பின்புறம், ‘அங்கோரா ரோமம் மற்றும் தோல் இவற்றுக்கு நோ சொல்வோம்!' என்று எழுதப்பட்டிருந்தது.

    தோல் ஆடைகள்

    தோல் ஆடைகள்

    சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த இலியானா, தனது முன்புறம், விலங்குகளின் தோல் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ‘ஃபர்' என்று எழுதி அடிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை அணிந்து வந்தார்.

    முயல் ரொம்ப பிடிக்கும்

    முயல் ரொம்ப பிடிக்கும்

    இந்த நிகழ்ச்சியில் பேசிய இலியானா, ‘‘விலங்குகளில் முயல்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றின் துறுதுறு குணமும், அழகான உடலமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.

    முயல்களுக்கு கொடுமை

    முயல்களுக்கு கொடுமை

    சிலர் அங்கோரா முயல்களை உயிருடன் இருக்கும்போதே கொடுமைப்படுத்துகிறார்கள். அவற்றின் ரோமங்களைப் பறித்து ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தோல் ஆடைகளுக்கு தடா

    தோல் ஆடைகளுக்கு தடா

    முயல்கள் மட்டுமில்லை விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் தடா சொல்வோம்!'' என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார் இந்த கவர்ச்சிப் புயல். இடுப்பழகி சொன்னபிறகு அதற்கு அப்பீல் இருக்கா என்ன?

    English summary
    It has long been known that Ileana D'Cruz is an animal lover. The Barfi actress showed her support further by starring in a new advertisement for People for the Ethical Treatment of Animals (PETA) India. The new campaign that has a backless image of Ileana, was launched in association with Lakme Fashion Week and comes with the tagline - Give cruelty the cold shoulder. Say NO to angora fur and wool.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X