வெள்ளை பிகினியில் இலியானா.. அந்த அழகை ரசித்து லைக் போட்ட காஜல் அகர்வால்!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

Thalapathy 65 Bigg Breaking | A.R.Murugadoss | Vijay | Kajal | Pooja Hegde

கடந்த 2006ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் தேவதாசு படத்தில் அறிமுகமான இலியானா, அதே ஆண்டில் தமிழில் வெளியான கேடி படத்திலும் ஹீரோயினாக கோலிவுட்டிலும் அறிமுகமானார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

விஜய்யுடன்

விஜய்யுடன்

மகேஷ் பாபுவின் போக்கிரி, பவன் கல்யாணின் ஜல்சா, ரவி தேஜாவின் கிக் என இலியானா நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் டோலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. கேடி படத்திற்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்தினார் இலியானா.

பாலிவுட்

பாலிவுட்

டோலிவுட், கோலிவுட் என வெற்றிமுகம் காட்டிய இலியானா, அடுத்ததாக பாலிவுட்டுக்கு பறந்தார். கடந்த 2012ம் ஆண்டு அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான பர்ஃபி படத்தின் மூலம் இந்தி படத்தில் அறிமுகமானார் இலியானா. தொடர்ந்து, மெயின் தெரா ஹீரோ, ரஸ்டம், ரெயிட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளை நிற பிகினியில்

வெள்ளை நிற பிகினியில்

நண்பன் படத்தில் விஜய்யுடன் இலியானா ஆடும் "இருக்கானா இடுப்பு இருக்கானா.. இல்லையானா இலியானா" பாடல் இன்னமும் கோலிவுட்டில் இலியானாவின் புகழை ஓங்கச் செய்து வருகிறது. லாக்டவுனில் இருக்கும் இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற பிகினியில் இருக்கும் த்ரோபேக் பிக்சரை போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

நோ பேன்ட்

நோ பேன்ட்

மேலும், அந்த புகைப்படத்துடன் கேப்ஷனாக தனது ஷார்ட் கூந்தலில் மலர்களை சூடியுள்ளேன் என்றும், வெள்ளை நிற பிகினி அணிந்து இருக்கும் இலியானா பேன்ட் ஏதும் அணியாமல், வெறுங்காலுடன் இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்த நினைவுகளையும் பகிர்ந்துள்ளார். விடுமுறையை கழிக்க தீவு ஒன்றுக்கு சென்ற போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

லைக் பண்ண காஜல்

லைக் பண்ண காஜல்

டோலிவுட்டின் முன்னணி ஹீரோயினான இலியானா தனது ஹாட் பிகினி புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை குவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும், இலியானாவின் இந்த அழகான பிகினி புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளார்.

தி பிக் புல்

தி பிக் புல்

அஜய் தேவ்கன் தயாரிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் தி பிக் புல் படத்தில் அபிஷேக் பச்சன், அஜய்தேவ்கன் உடன் இணைந்து இலியானா லீடு ரோலில் நடித்து வருகிறார். இயக்குநர் கூக்கி குலாட்டி இயக்கத்தில் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X