இலியானாவின் குழந்தைக்கு ஒரு வயசு ஆகிடுச்சாம்.. ’நண்பன்’ நடிகையின் வாரிசு என்னலாம் பண்றாரு பாருங்க!

சென்னை: நடிகை இலியானா கடந்த ஆண்டு மைக்கேல் டோலன் எனும் வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்துக் கொண்டார். முதலில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு இந்த கர்ப்பத்துக்கு காரணம் யார் தெரியுமா என ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இலியானா. அந்த படத்தில் வில்லியாக நடித்து தமன்னாவும் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் 2006ம் ஆண்டு வெளியான தேவதாசு படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான இலியானா அதே ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தின் மூலமும் ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டார்.

Ileana D Cruz heroine

கேடி படம் கோலிவுட்டில் சரியாக போகாத நிலையில், தொடர்ந்து டோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார் இலியானா. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பம்: பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர் நடித்த பர்ஃபி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நடிகையாக அறிமுகமான இலியானா தொடர்ந்து அங்கே பல படங்களில் நடித்து வந்தார். பல சினிமா பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த இலியானா வெளிநாட்டினர் சிலருடன் டேட்டிங் செய்து வந்தார். கடைசியாக கடந்த ஆண்டு மைக்கேல் டோலன் எனும் வெளிநாட்டினரை திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்பாகவே அவர் கர்ப்பமானதாக தகவல்கள் வெளியாகின. கர்ப்பத்துக்கு பிறகு அவரை திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டன.

Ileana D Cruz heroine

ஆண் குழந்தை: நடிகை இலியானாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு Koa Phoenix Dolan என பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில், அந்த குழந்தைக்கு அதற்குள் ஒரு வயது ஆகிவிட்டதாக அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

ஒரு வயசாகிடுச்சு: கோவா பீனிக்ஸ் டோலனுக்கு அதற்குள் ஒரு வயதாகி விட்ட நிலையில், அவரது குறும்புத்தனமான சேட்டை புகைப்படங்கள் மற்றும் கணவருடன் இலியானா எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கியுள்ளார் நம்ம நண்பன் பட நடிகை.

Ileana D Cruz heroine

இந்த ஆண்டு ரெண்டு படம்: இலியானா நடிப்பில் ஏற்கனவே உருவான 2 படங்கள் இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி உள்ளன. தேரா கியா ஹோகா லவ்லி மற்றும் தோ அவுர் தோ பியார் என 2 படங்களும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. டோலிவுட்டை விட்டு விட்டு பாலிவுட் பக்கம் போனாலும் இலியானாவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் சீக்கிரமே திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டார் என்கிற ட்ரோல்களும் அவரை சுற்றி உலா வருகின்றன.

தொடர்ந்து நடிப்பாரா?: நடிகை இலியானா குழந்தையை வளர்ப்பதில் ரொம்பவே கவனமாக இருப்பதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு அவர் சினிமாவில் நடிப்பதை பற்றி யோசிக்கவில்லை என்றே கூறுகின்றனர். ஆனால், மகன் வளர்ந்துவிட்ட பின்னர் மீண்டும் பாலிவுட்டில் நடிகையாக கம்பேக் கொடுப்பார் இலியானா என்றே கூறப்படுகிறது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

Ileana D Cruz heroine

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X