கரீனா கணவருடன் அமெரிக்காவில் டூயட் பாடப்போகும் இலியானா
மும்பை: இலியானாவுக்கு பாலிவுட்டில் கிராக்கி அதிகரித்துள்ளது. சைப் அலி கானுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்கிறார்.
கோவாவைச் சேர்ந்த இலியானா தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். தெலுங்கில் கொடிகெட்டிப் பறந்தார். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவ்வப்போது தமிழ் படங்களிலும் வந்து தலையைக் காட்டிவிட்டு போனார்.
இந்நிலையில் பர்ஃபி இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. படம் ரிலீஸானவுடன் இலியானாவின் நடிப்பை அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பாராட்டினர். இதையடுத்து அம்மணி மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு கிளம்பினார். தற்போது அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
பர்ஃபியை அடுத்து ஷாஹித் கபூரூடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சைப் அலி கானுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சைபுடன் டூயட்
ராஜ் நிடிமொரு மற்றும் டிகே கிருஷ்ணா இயக்கும் காதல் காமெடி படத்தில் சைப் அலி கான் ஜோடியாக நடிக்க இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் ஷூட்டிங் துவங்குகிறது.

அமெரிக்காவில் ஷூட்டிங்
சைப்-இலி ஜோடி சேரும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகிறதாம்.

மும்பைக்கு போனது வீண் போகவில்லை
இலியானா மும்பையில் செட்டிலானது நல்லதாகப் போயிற்று. வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஜாலி மேன் சைப்
ஜாலியான கதாபாத்திரங்கள் சைப் அலி கானுக்கு மிகவும் பொருந்தும். இந்நிலையில் அவர் இலியானாவுடன் சேர்ந்து காதலும், காமெடியும் பண்ணவிருக்கிறார்.

அசின் பாணியில் இலியானா
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த அசின் ஜாகையை மும்பைக்கு மாற்றி பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகளே இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இலியானாவும் அசின் பாணியில் பாலிவுட்டில் செட்டிலாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











