முதல்ல அவரு இப்ப இவரு.. அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் நாயகி? மார்க்கெட் போனவருக்கு இப்டி ஒரு லக்கா!
வலிமை படத்தில் இலியானா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை: வலிமை படத்தில் இலியானா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'வலிமை'. போனிகபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

போலீஸ் அதிகாரி, கார் ரேஸ் வீரர் என அஜித் இதில் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறுது. அஜித் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக வலிமை உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக எடைக் குறைத்து, புதிய பொலிவுடன் அஜித் களம் இறங்கியிருக்கிறார்.
படம் குறித்து விஷயங்கள் தெரியவந்தாலும், அஜித் ஜோடியாக நடிப்பது யார்? என்ற கேள்விக்கு மட்டும் விடைக்கிடைக்காமல் இருந்தது. முதலில் நயன்தாரா, நஸ்ரியா பெயர்கள் அடிபட்டன. பின்னர் யாமி கவுதம் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் வலிமை படத்தில் நடிக்க இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வலிமையில் அவரை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வினோத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா? என்பது குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை இலியானா. தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். டோலிவுட்டில் இருந்து பாலிவுட் போன அவர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











