மீண்டும் வந்தார் இலியானா!

By Shankar

Ileana
ரஜினி படத்தின் ஏழு நாயகிகளுள் ஒருவராக இலியானா ஒப்பந்தமாகியுள்ளதாக, இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலியானா தமிழ்ப் படத்தில் நடிப்பது ஜவ்வாக இழுத்துக் கொண்டே போகிறது. கேடி என்ற தமிழ்ப் படத்தில்தான் அவர் முதலில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கு தேசத்தில் செட்டிலாகிவிட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. அது ராணா. ரஜினியுடன் ஜோடி. ஆனால் சம்பளம் பத்தவில்லை என்று நடிக்க மறுத்தார்.

அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரனில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் அனுஷ்கா வந்துவிட்டார்.

அடுத்து விக்ரம் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி, விலகினார். ஒருவழியாக ஷங்கரின் 3 இடியட்ஸில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங்கிலும் பங்கேற்றுள்ளார்.

இந்த நிலையில், இப்போது ரஜினியின் ஜோடிகளில் ஒருவராக ராணாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் இலியானா. முதலில் ஒப்புக் கொண்டது 3 இடியட்ஸ்தான் என்றாலும், அதில் கால்ஷீட் ஒரு மாதத்துக்குதான் கொடுத்துள்ளாராம். ராணாவுக்கு 3 மாதங்கள் வரை தரத் தயாராக உள்ளாராம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X