காதலருக்கு லிப் டூ லிப் முத்தம்: போட்டோவை வெளியிட்ட இஞ்சி இடுப்பழகி
மும்பை: தனது காதலர் ஆன்ட்ரூ நீபோனுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.
டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்ட இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ நீபோன் என்ற புகைப்படக் கலைஞரை காதலித்து வருகிறார்.
பிற நடிகைகள் போன்று காதலை மறைக்காமல் வெளிப்படையாக தெரிவித்தார் இலியானா.
முத்தம்
காதலர் ஆன்ட்ரூ நீபோனுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா.

இலியானா
புகைப்படக் கலைஞரான ஆன்ட்ரூ நீபோன் இலியானாவை வகை வகையாக புகைப்படம் எடுத்து வருகிறார். அவர் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார் இலியானா.

காதல்
காதலை இப்படி வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் சினிமா கெரியர் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். இதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று இலியானா தெரிவித்துள்ளார்.

ரகசியம்
காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கும் நபர் நான் இல்லை. காதல் என்பது இரண்டு பேர் பற்றியது. அதனால் அந்த நபருக்கு மரியாதை அளித்து அதன் விபரங்கள் பற்றி நான் பேசுவது இல்லை என்கிறார் இலியானா.


Click it and Unblock the Notifications











