காதல் தோல்வி.. தீவிர மன அழுத்தம்.. கூடிய எடை.. தினமும் 12 மாத்திரைகள் எடுத்துக்கொண்ட விஜய் நாயகி!
மன அழுத்தத்தில் இருந்து குணமடைய ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் எடுத்துக்கொண்டதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மன அழுத்தம் காரணமாக ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் எடுத்துக் கொண்டதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடித்துள்ள பாகல்பந்தி இந்தி படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
நடிகை இலியானாவும் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ருவும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர். ஒருநாள் திடீரென இருவரும் பிரேக்கப் செய்துவிட்டனர். அதன் பிறகு ஆண்ட்ருவின் புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து இலியானா நீக்கிவிட்டார்.

மன அழுத்தம்
காதல் முறிவால் கடும் மனஅழுத்தத்திற்கு இலியானா ஆளானார். இதனால் தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி வந்துவிட்டதாக சமீபத்தில் அவர் அறிவித்தார். மேலும் தீராத மனக்குழப்பத்திற்கும் அவர் தள்ளப்பட்டார்.

12 மாத்திரைகள்
இந்நிலையில் ஆண்ட்ரு உடனான காதல் மற்றும் பிரேக்கப் குறித்து இலியானா பேட்டி அளித்துள்ளார். அதில் மன அழுத்தத்தில் இருந்து குணமடைய ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிப்பதை நிறுத்தினேன்
"கடந்த வருடம் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட போது, நாள் ஒன்றுக்கு 12 மாத்திரைகள் வரை எடுத்துக்கொண்டேன். அதனால் என் உடல் தோற்றம் மாறியது. இதனால் சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன்", என இலியானா கூறியுள்ளார்.

வீட்டில் முடங்கினேன்
மேலும் உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்ல நினைத்ததாகவும், ஆனால் அங்கு செல்லும் போது யாராவது போட்டோ எடுத்து வெளியிட்டுவிட்டால் அவமானமாகிவிடுமே என நினைத்து அதை தவிர்த்ததாக இலியானா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பல நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











