லீட் ரோலுக்கு ஆசைப்பட்டு தமிழில் நடிக்க வாய்ப்பு தேடும் இலியானா!
Recommended Video

தமிழில் நடிக்க வாய்ப்பு தேடும் இலியானா!- வீடியோ
காலம் போன காலத்துல கடைசியா வந்து சேர்ற இடம் போல சென்னை ஆகி விட்டது. இங்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தெலுங்கு, ஹிந்தி பக்கம் போன நடிகைகள் தங்கள் கேரியரின் கடைசியில் தமிழுக்கே வருகிறார்கள்.
அந்த வரிசையில் சேர ஆசைப்படுகிறாராம் இலியானா. தமிழில் அறிமுகமாகி, பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போன இலியானா பின்னர் சில ஹிந்தி படங்களில் நடித்தார். அங்கும் இப்போது கேரியர் டல்லடிக்கிறது.

நிறைய இளம் நடிகைகள் வருவதால் இலியானாவை சீண்ட ஆள் இல்லை. போதாத குறைக்கு காதல், திருமண சர்ச்சையில் வேறு சிக்கியுள்ளார். இதனால் வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
சமீபத்தில் ஒரு பேட்டியில் 'தமிழ், தெலுங்கு மொழிகளில் கிளாமர் அல்லாத ரோல்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை இலியானாவை கைவிடுமா என்ன?


Click it and Unblock the Notifications











