விஜஜ்யுடன் ஜோடி சேரும் இலியானா!

கேடி படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. அப்போது அவர் தெலுங்கில் முன்னணிக்கு முன்னேறிக் கொண்டிருந்த நேரம். கேடி படத்தோடு தமிழுக்கு முழுக்குப் போட்டு விட்டு தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார் இலியானா.
தெலுங்கில் நம்பர் ஒன் ஸ்டாராக மாறிய பின்னர் தமிழில் நடிக்க மறுத்து வந்தார். போக்கிரி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இலியானாவை கூப்பிட்டபோது மறுத்தார்.
இந்த நிலையில், விஜய் படத்தில் நடிக்கும் இன்னொரு வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. இம்முறை அதை தட்டாமல் ஏற்றுக் கொண்டுள்ளார் இலியானா. இந்தப் படத்தை இயக்கப் போவது பிரபு தேவா.
ஒரிஜினல் தெலுங்கு போக்கிரியில் ஹீரோயினாக நடித்தவர் இலியானாதான். பிரபு தேவா இயக்கம் என்பதால் கதையையும், சம்பளத்தையும் பற்றிக் கூட பேசாமல் உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் இலியானா.
தற்போது விஜய் குருவி படத்தில் திரிஷாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டுக்கு குருவி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் தங்களது அடுத்த படம் குறித்த வேலைகளைத் தொடங்கவுள்ளனராம் விஜய்யும், பிரபு தேவாவும்.
இருவரும் இணைந்து கொடுத்த போக்கிரி பெரும் ஹிட் ஆனது. எனவே, இவர்களின் அடுத்த கூட்டணி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











