»   »  தொங்கலில் த்ரிஷா-கிலியில் இலி!

தொங்கலில் த்ரிஷா-கிலியில் இலி!

Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவும், இலியானாவும் கப்பல் கபால் என கடலில் கவிழ்ந்து போனது போலபெரும் சோகத்தில் உள்ளனர். லேட்டஸ்டாக இருவரும் நடித்த படங்கள் ஓடாமல்ஓடிப் போன சோகம்தான் காரணம்.

இந்த நிமிஷத்தில் தெலுங்கின் நம்பர் ஒன் ஹீரோயின்கள் இலியானாவும்,த்ரிஷாவும்தான். முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்கள் இந்த இருவருக்கும்இடையேதான் மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் நயனதாரா, ஆசின் என மற்றவர்களும் முதலிடத்தை நோக்கிபாய்ந்து கொண்டிருந்தாலும், த்ரிஷா, இலியானா இடத்தை இன்னும் யாரும்நெருங்கவில்லை.

வர்ஷம் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகியாக மாறியவர்த்ரிஷா. அதேபோல கேடி படம் இலியானாவுக்கு பெத்த பெயரை தேடிக் கொடுத்தது.

த்ரிஷா ஒரு கோடி வரை சம்பளம் வாங்கினார். போட்டி அதிகரித்ததால் அதைகுறைத்துக் கொண்டார். இலியானாவும் இப்போது கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் கோடீஸ்வர நாயகியும், கேடி நாயகியும் இப்போதுபெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்த ஸ்டாலின் மகா ஹிட் ஆனதால் ரொம்பசந்தோஷப்பட்டார். அதேபோல மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த சைனிக்குடுபடமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருந்தார்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்திருந்தார். தெலுங்குத்திரையுலகும் கூட இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தது. ஆனால் யாரும்எதிர்பாராத வகையில் படம் படுத்து விட்டது. திரையிட்ட சில நாட்களிலேயேசைனிக்குடுவை திரையிட்ட தியேட்டர்களில் சாதாரண காற்று அல்ல, சுழல் காற்றேசுற்றிச் சுற்றி அடித்தது.

இதனால் த்ரிஷாதான் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். காரணம் இந்தப் படம்பெரும் வெற்றி பெற்றால் அதை வைத்து மறுபடியும் சம்பளத்தை குண்டக்க மண்டக்கஏற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் சைனிக்குடு கொடுத்தஅடியால் அவர் துவண்டு தொங்கிப் போய் விட்டாராம்.

இதேபோல இலியானாவும், அப்செட்டில் உள்ளார். ரவிதேஜாவுடன் ஜோடி போட்டுநடித்த கத்தர்நாக் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் இலி. ஆனால் படமோபூணையைக் கண்ட எலி போல தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டுள்ளதாம்.

படத்தின் வசூல் படு கவலைக்கிடமாக இருப்பதாக வரும் செய்திகளால் இலியானாஅப்செட் ஆகியுள்ளார். இப்போதைக்கு த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும்நடிகை இலிதான். ஆனால் அதற்கு கத்தார்நாக் வேட்டு வைத்து விடுமோ எனபயப்படுகிறாராம் இலி.

படம் ஓடணுமே என்று நாயகர்கள் கவலைப்பட்ட காலம் போய், இப்போதுஹீரோயின்களும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பத்திக் கவலைப்படும் காலம் வந்து விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil