»   »  இலியனா போய் நயனா

இலியனா போய் நயனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு சாதாரண சேலையால் இலியானாவைத் தேடி வந்த வாய்ப்பு நழுவிப் போய் நயனதாராவிடம் ஒட்டிக்கொண்டுள்ளது.

டோலிவுட்டின் இப்போதைய லாலி பாப் பேபி இலியானாதான். அவருடைய இடுப்பசைவுக்கே அங்கு எக்கச்சக்கரசிகர்கள் உருகிப் போய்க் கிடக்கிறார்கள்.

இலியானாவின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கடும் தவம் புரியும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் தன்னைத் தேடி வந்த ஒரு வாய்ப்பை சாதாரண சேலையால் நழுவ விட்டுள்ளாராம் இலியானா.சமீபத்தில் ஒரு தெலுங்குப் படத் தயாரிப்பாளர் இலியானாவை தனது படத்தில் நடிக்க வைக்க அணுகினார். அவர்பிரபலமான ஆள் என்பதால் இலியானா பிகு பண்ணாமல் ஓ.கே. சொல்லியுள்ளார். படத்தின் கேரக்டருக்குஇலியானா பொருத்தமாக இருப்பாரா என்பதை அறிய காஸ்ட்யூம் டெஸ்ட்டுக்கு இலியானாவைஅழைத்துள்ளனர்.

கதைப்படி நாயகிக்கு சேலையில் வரும் காட்சிகள்தான் அதிகம். இஞ்ச் கணக்கில் டிரஸ் போடும் இலியானாவுக்குசேலை பாந்தமாக இருக்குமா என்ற சந்தேகத்தில்தான் காஸ்ட்யூம் டெஸ்ட் வைக்க முடிவு செய்தார்களாம்.

அழகான ஒரு சேலையை இலியானாவுக்கு சுற்றி விட்டு பார்த்துள்ளார்கள். சேலையில் வந்த இலியானாவைப்பார்த்து தயாரிப்பாளரும், இயக்குநரும் மிரண்டு போய் விட்டார்களாம். காரணம் எலும்பும், தோலுமாக படுபாவமாக காட்சி அளித்துள்ளார் இலியானா.

என்னடா இது இமயமலைக்கு வந்த குளிர்காய்ச்சல் என்று அரண்டு போய், ஸாரிம்மா, சாரி உங்களுக்குபொருத்தமா இல்லை, அடுத்த வாய்ப்பில் பார்க்கலாம் என்று கூறி இலியானாவைத் திருப்பி அனுப்பிவிட்டார்களாம். இதனால் இலியானா ஒன்றும் வருத்தப்படவில்லையாம்.

சேலையில் நடிக்க இலியானாவுக்கே விருப்பம் இல்லையாம். பெரிய தயாரிப்பாளராச்சே என்றுதான் டெஸ்டுக்குவந்தாராம். இருந்தாலும் இந்தப் படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், சேலையால் நழுவிப் போய்விட்டதே என்று லேசான வருத்த.ம் இருந்ததாம்.

இலியானா நழுவ விட்ட வாய்ப்பை இப்போது நயனதாரா கப்பென்று பிடித்துள்ளார். நயனதாராவுக்குசேலையைக் காட்டினால் படு கும்மாக இருப்பார் என்பது திரையுலகம் அறிந்த உண்மை. எனவேதான்நயனதாராவை புக் செய்தார்களாம்.

எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு டெஸ்ட்டும் வைத்துப் பார்த்துள்ளனர். விதம் விதமான சேலையில் அழகுச்சோலையாக வந்து நின்ற நயனதாராவைப் பார்த்து அடடா, அப்சரஸ் தோத்தா போங்கோ எனறு புல்லரித்துப்போய் விட்டார்களாம் இயக்குநரும், தயாரிப்பாளரும்.

இலியானாவுடன் வாய்ப்புப் போட்டியில் புதிதாக குதித்துள்ள நயனதாரா, அவருக்குப் போகவிருந்த ஒருவாய்ப்பை தனது சேலைத் தலைப்பில் முடிந்து முதல் ரவுண்டில் வென்று விட்டார்.

Read more about: nayanatara replaces illiyana

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil