»   »  இலியானா ஷாக்!

இலியானா ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் படு வேகமாக முன்னேறி வரும் இலியானாவை அணுகி ஷாக் ஆகிதிரும்பியிருக்கிறது சர்வம் பட யூனிட்.

சர்வம் என்ற பெயரில் தமிழில் ஒரு படம் தயாராகிறது. சில்லுன்னு ஒரு காதல்படத்தைத் தயாரித்த ஞானவேல்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். சூர்யாதான்நாயகன்.

அறிந்தும் அறியாமலும், பட்டியல் புகழ் இயக்குனர் விஷ்ணுவர்தன்தான்இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தேனிலவு போயுள்ள சூர்யா ஊர் திரும்பிய பின்னர் வருகிற 26ம் தேதி பட பூஜைக்குத்திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்காக இலியானாவை ஹீரோயினாக போட முடிவுசெய்து அணுகியிருக்கிறார்கள்.


நான் இப்போதைக்கு நிறைய தமிழ் படங்களில் நடிப்பதாக இல்லையே என்றுமுதலில் பந்தா காட்டியிருக்கிறார் இலியானா.

கதையைச் சொன்ன தயாரிப்பாளரும், இயக்குனரும், சம்பளம் பத்திப் பேசுவோமாஎன்று கேட்டிருக்கிறார்கள்.


என்னிடம் ஒரே பேச்சுதான். மொத்தமாக ஒரே பேமன்ட்டா 50 லட்சத்தைகொடுத்திடுங்க, அடுத்த நிமிடமே கால்ஷீட் கொடுத்து விடுகிறேன் என்று இலியானாகூலாக கூற, பாம்புப் புத்தில் உட்கார்ந்து விட்ட அதிர்ச்சிக்கு ஆளானார்களாம்தயாரிப்பாளரும், இயக்குனரும்.

தமழில் நடித்தது ஒரு படம்தான் அதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள்அம்பதா என்று கடுப்பாகிப் போன தயாப்பாளரும், இயக்குனரும் அங்கிருந்துவிட்டாகள் ஜூட். அடுத்து யாரைப் பார்க்கலாம் என யோசித்த அவர்களின் சிந்தனைவானில் வந்து விழுந்தார் நிலா.


சரி, நிலாவைக் கேக்கலாம் என முடிவு செய்து அவரை அணுகினர். கதையைப் பற்றிகொஞ்சம் கவலைப்படாத நிலா, நேராக காசு மேட்டுரக்குப் போய் விட்டாராம்.

30 லட்சம் கொடுப்பதாக இருந்தால் உடனே கால்ஷீட் என்று நிலா, சரியான கல்லாப்பெட்டி சிங்காரியாக இருப்பார் போலிருக்கே என்று நினைத்த ஞானவேலும்,விஷ்ணுவர்த்தனும் பேசாமல் திரும்பி விட்டனர்.

இப்போது அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறாராம். தெலுங்கில் நடித்து வரும்அன்ஷிகாவை இப்படம் மூலம் தமிழுக்குக் கூட்டி வருகிறார்கள். இவரும் இலியனாவைப்போலவே மகா ஸ்ட்ரக்சர் கொண்டவர்


இலியானா பந்தா காட்டுவது புதிதல்ல. ஏற்கனவே போக்கிரி படத்தில் நடிக்க வைக்கவிஜய்யே விருப்பப்பட்டு கேட்டாராம். ஆனாலும் முடியாது என்று கூறி விட்டாராம்இலியானா. இதனால்தான் ஆசினைப் போட்டு படத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சூர்யா படத்தையும் நழுவ விட்டிருக்கிறார் இலியானா. அடுத்து யாரைபோட்டுத் தள்ள போகிறாரோ?

Read more about: illiayna avoids tamil films

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil