»   »  இம்சை அரசி இலியனா!

இம்சை அரசி இலியனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இலியானாவுக்கு இம்சை அரசி என்ற பெயரை கோலிவுட்டில் சூட்டியுள்ளனர். அந்த அளவுக்கு தேடி வரும்தயாரிப்பாளர்களை கூடுதல் சம்பளம், குண்டக்க மண்டக்க நிபந்தனைகள் போட்டு இம்சை செய்கிறாராம்.

தெலுங்கில் பிசியான நடிகைதான் இலியானா. தமிழில் அவர் கேடி படத்தில் சின்னத் தம்பி ரவிகிருஷ்ணாவுக்குஜோடியாக நடித்துள்ளார். பயங்கர டிமாண்ட் உள்ள நடிகைதான் இலியானா. காரணம், தெலுங்கில் அம்மாகொடிதான் உசரத்தில் பறக்கிறது.

அங்குள்ள ஹீரோக்கள் பலரின் மனதில் இடம் பிடித்து விட்டதால் ஒவ்வொரு ஹீரோவும் மாறி, மாறி வாய்ப்புதந்து இலியானாவின் வங்கிக் கணக்கை ரொப்ப உதவி வருகிறார்கள். அந்த தைரியத்தில்தான் தன்னைத் தேடிவரும் தமிழ்ப் பட தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை இலியானா.

கேடி படம் கூட தெலுங்குக்காரரான ஏ.எம்.ரத்னம் படம் என்பதால்தான் இலியானா ஒத்துக் கொண்டாராம்.இளைய தளபதியின் போக்கிரி படத்துக்குக் கூட இலியானாவைத் தான் முதலில் கேட்டனர். ஸாரி, நோ கால்ஷீட்என்று படு கூலாக கூறி விட்டாராம் இலி.

புலியாக மாறி விட்ட தளபதி, பிடித்துப் போடுங்கள் ஆசினை என்று கூறி விட்டார்.

கேடி படம் சுமாராக ஓடத் தொடங்கியுள்ளதால், இலியானாவை பிடித்துப் போட நினைத்த சில தமிழ்ப் படதயாரிப்பாளர்கள் தேடி ஓடியுள்ளனர். நாடி வந்த தயாரிப்பாளர்களை நாகரீகமாக நடத்தாத இலியானா சம்பளம்60, அதுபோக ஏகப்பட்ட கண்டிஷன்களை கூறி கலங்கடித்துள்ளார்.

த்ரிஷாவுக்கே நாங்கள் இம்புட்டுத்தான் கொடுக்கிறோம். உங்களுக்கு இப்பவே இம்புட்டா என்று கடுப்பாகிதிரும்பிப் பார்க்காமல் ஓடி வந்து விட்டார்களாம். கேடிக்கு முன்னதாக அவர் நடிக்க ஒத்துக் கொண்ட சர்வம்படத்திலிருந்தும் இலியானாவை ஏற்கவே நீக்கி விட்டார்கள். எல்லாம் சம்பளத்தை ஏத்தியதால்தான்.

இதேபோல அஜீத்துடன் கிரீடம் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு இலியானாவைத் தேடி வந்ததாம். வழக்கம் போலபந்தா காட்டவே வேண்டாம் என்று விட்டு விட்டார்களாம். பிறகு நயனதாராவைப் போடலாம் எனநினைத்துள்ளனர். தற்போது த்ரிஷா அல்லது ஸ்னேகாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம்.

தமிழ்ப் பட வாய்ப்புகளை இலியானா தட்டி விட முக்கியக் காரணம், போதும் போதும் எனும் அளவுக்குதெலுங்குப் படங்கள் இருப்பதாலும், அங்கு டப்பு அதிகம் தருகிறார்கள் என்பதால்தான் தமிழைகண்டுகொள்ளாமல் தட்டிக் கழிக்கிறாராம் இலியானா.

இருக்கட்டும், இருக்கட்டும் கடைசியில் இங்கேதானே வந்தாக வேண்டும், அப்ப வைத்துக் கொள்கிறோம்ஆப்பை என்று கருவிக் கொண்டிருக்கிறார்கள் இலியானாவின் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil