»   »  இறங்கிய திரிஷா, ஏறிய இலியானா!

இறங்கிய திரிஷா, ஏறிய இலியானா!

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் திரிஷாவின் நிலை இறங்குமுகமாகி விட்டது. புது வரவு இலியானா படு ஜோராக நம்பர் ஒன்பொசிஷனுக்கு வந்து கொண்டுள்ளார்.

இலியானாவின் வரவுக்கு முன்பு வரை திரிஷாதான் தெலுங்கில் டாப் ஸ்டாராக இருந்தார். அத்தனைஹீரோக்களும் திரிஷாவுடன் ஜோடி போட போட்டி போட்டனர். அந்த அளவுக்கு திரிஷாவுக்க ரசிகர்கள்மத்தியில் நல்ல டிமாண்ட் இருந்தது.

ஆனால் இலியானா நடித்த போக்கிரி ஓடினாலும் ஓடியது, திரிஷா மீது இருந்த ரசிகர்களின் மோகம் எல்லாம்இலியானா பக்கம் திரும்பி விட்டது. ஒல்லி இடுப்புக்காரியான திரிஷாவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும்வகையில், இலியானாவின் இடுப்பு ரசிகர்களுக்கு கிக் ஏற்றத் தொடங்கியுள்ளதாம்.

போக்கிரியில், இலியானாவின் ஆட்டம் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி விட்டது.திரிஷாவை விட இலியானா படு டாப்பாக ஆடுவதாக ரசிகர்கள் புளகாங்கிதமடைந்து கூறுகிறார்கள்.

இதனால் இலியானாவின் கால்ஷீட் புத்தகம் படு வேகமாக நிரம்ப ஆரம்பித்துள்ளது. ரவிதேஜாவுடன் ஒருபடத்தில் புக் ஆகியுள்ளார் இலியானா. அதேபோல மலையாளத்து மம்தா மோகன்தாஸ் நடிக்கவிருந்த ஒருபடத்தின் வாய்ப்பும் இலியானாவைத் தேடி வந்துள்ளது.

விநியோகஸ்தர்களின் விருப்ப நாயகியாகியுள்ளார் இலியானா. இலி நடிக்கும் படங்கள் என்றால் அதற்கான ரேட்பற்றிக் கூட விநியோகஸ்தர்கள் கவலைப்படுவதில்லையாம்.ஒக்க படத்திலேயே உச்சத்திற்கு வந்து விட்ட இலியானாதான் இப்போது தெலுங்குத் திரையுலகின் டாப் சுந்தரிஎன்கிறார்கள். அவரது சம்பளம் திரிஷாவை விட அதிகமாகி விட்டதாம்.

இதனால் திரிஷா பாடு திண்டாட்டமாகியுள்ளதாம். ஸ்டாலின் படம் அவருக்கும் பெரிய பெயரைக்கொடுத்திருந்தாலும் கூட இலியானாவின் சூறாவளி பாய்ச்சலுக்கு முன்பு திரிஷாவால் நிற்க முடியாதுஎன்கிறார்கள்.

ஆனால் இதைப் பற்றி திரிஷா கவலைப்படுவது போல தெரியவில்லை. எனக்கு நம்பர் ஒன், டூ என்பதில் எல்லாம்நம்பிக்கை இல்லை. ரசிகர்களுக்குப் பிடித்தால் நீங்கள் நம்பர் ஒன், இல்லாவிட்டால் நம்பர் டென்னுக்குள் கூடஇடம் கிடைக்காது என்று விட்டேற்றியாக விரக்தியாக பேசுகிறார் திரிஷா.

இலியானா வந்து திகியை பற்ற வைத்து விட்டார். இனி திரிஷா, தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பவேண்டியதுதான்!

Read more about: ileana makes waves in telugu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil