பேசிப் பேசியே என்னை நடிகையாக்கிவிட்டார் யாஷ் சோப்ரா: ஐஸ்வர்யா ராய்
மும்பை: தான் இன்றைக்கு திரையுலகில் இருப்பதற்கு மறைந்த இந்தி இயக்குனர் யாஷ் சோப்ரா தான் காரணம் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
உலகி அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை திரையுலகிற்கு அழைத்து வந்த பெருமை அண்மையில் மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ராவையே சாரும்.இது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில்,
யாஷ்ஜி எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர். நான் இன்றைக்கு திரையுலகில் இருக்க முக்கிய காரணங்களில் அவரும் ஒருவர். அவர் 2 ஆண்டுகளாகப் பேசிப் பேசியே ஒரு வழியாக என்னை திரையுலகிற்கு அழைத்து வந்துவிட்டார். அவருக்கு என் இதயம் மற்றும் வாழ்வில் ஸ்பெஷலான இடம் உண்டு என்றார்.
ஐஸ்வர்யா யாஷ்ராஜ் பிலிம்ஸின் மொஹப்பதைன் மற்றும் தூம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் யாஷ்ராஜ் பிலிம்ஸின் அபிஷேக், அமிதாப் நடித்த பண்ட்டி அவ்ர் பப்ளி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.
ஐஸ்வர்யாவை திரையுலகிற்கு யாஷ் சோப்ரா அழைத்து வந்தாலும் அவரது முதல் படம் மணிரத்னத்தின் இருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications
