அஜீத்துக்காக காத்திருக்கும் ஷ்ரியா

பில்லாவை முடித்து விட்ட அஜீத் அடுத்து, டான்ஸ் மாஸ்டராக இருந்து இயக்குநராக மாறியுள்ள ராஜு சுந்தரத்தின் இயக்கத்தில் அக்பர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரியாவை போட தீர்மானித்த ராஜு சுந்தரம், சில வாரங்களுக்கு முன்பு அவரை அணுகினார். ஆனால் படு டைட்டாக இருப்பதால் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், சில வாரங்கள் காத்திருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் காரணமே சொல்லாமல் ஷ்ரியா அஜீத் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாக செய்திகள் வெளியாகி விட்டன. இதைக் கேள்விப்பட்டுப் பதறிப் போன ஷ்ரியா தான் அப்படிச் சொல்லவே இல்லை என்று மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஷ்ரியா கூறுகையில், அஜீத் படம் தொடர்பாக வந்த செய்தியில் உண்மையே இல்லை. உண்மையில் நடந்தது என்னவென்றால், இயக்குநர் ராஜு சுந்தரம் என்னை அணுகினார். கதையையும் சுமார் 3 மணி நேரத்திற்குக் கூறினார்.
அவர் கதை சொன்ன விதமும், கதையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் தற்போது நான் அசோக் அமிர்தராஜின் ஹாலிவுட் படம், விக்ரமுடன் கந்தசாமி, இரண்டு இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனவே உடனடியாக கால்ஷீட் தர முடியாத நிலையில் இருக்கிறேன்.
3 மாதங்கள் காத்திருந்தால் நிச்சயம் கால்ஷீட் தர முடியும் என்றும் ராஜு சுந்தரத்திடம் கூறினேன். இதைக் கேட்ட ராஜு சுந்தரம், விரைவில் என்னை தொடர்பு கொள்வதாக கூறிவிட்டுச் சென்றார். அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அக்பர் படக் கதை எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. அந்தப் படத்தில், அஜீத்துடன் நடிக்க ஆவலாகவே உள்ளேன் என்றார் ஷ்ரியா.


Click it and Unblock the Notifications











