ஷூட்டிங் ஸ்பாட்டில் நாயுடன் விளையாடும் திரிஷா வைரல் ஆகும் புகைப்படம்

Recommended Video

Ponniyin Selvan | Soorarai Pottru Update

சென்னை: தனது அடுத்த பட ஷூட்டிங்கில் நாய் உடன் விளையாடிய திரிஷா.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் தான் திரிஷா. இவரது முழு பெயர் திரிஷா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார். ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார் திரிஷா.

In shooting spot trisha playing with a pet

திரிஷா தனது திரையுலக வாழ்க்கையை 1999ல் துவங்கினார். பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடி எனும் படத்தில் சிம்ரனின் நண்பர்களில் ஒருவராக வருவார். பின்பு ஹீரோயின் ஆக நடித்த திரைப்படம் ஷாம் நடித்த லேசா லேசா இப்படம் ரிலீஸ் ஆக சிறிது காலம் ஆனது. ஏ. ஆர். ரஹ்மான் பாடல்கள் மெகா ஹிட் ஆன படம் எனக்கு 20 உனக்கு 18 அப்படத்தில் நடித்தார் இப்படமும் ரிலீஸ் சரியான நேரத்தில் ஆகவில்லை. அவர் நடித்து முதலில் வெளியான திரைப்படம் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அவருக்கு மிகப்பெரிய மார்கெட்டை ஏற்படுத்திய திரைப்படம் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி இப்படத்தில் நடித்த கதாபாத்திரம் புவனா இன்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பின்பு மலையாளம் தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் நடித்தார் திரிஷா. தான் நடித்த முதல் தெலுங்கு திரைப்படத்திற்காக தனது முதல் பிலிம்பேர் விருதும் பெற்றார்.

பின்பு தமிழில் சினிமாவில் மெகாஹிட் படமான விஜய்யின் கில்லி படத்தில் நடித்தார் அதில் தனலட்சுமி என்னும் கதாபாத்திரம் அவருக்கு கன கச்சிதமாக
பொருந்தியது அதிலும் அப்படத்தில் பிரகாஷ்ராஜ் செல்லம் என்று திரிஷாவை அழைத்தது இன்றும் கூட திரிஷாவை அப்படியே அழைக்கின்றனர். பின்பு மணிரத்தினம் படமான ஆயுத எழுத்தில் நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

In shooting spot trisha playing with a pet

சில வருடங்கள் இடைவெளியில் திரிஷா விற்கு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு அமையவில்லை. பின் 96 எனும் படத்தில் நடித்து திரிஷா கம்பேக் கொடுத்தார். அப்படத்தில் வரும் ஜானு கதாபாத்திரம் மக்களிடையே அவரை கொண்டு சேர்த்தது. திரிஷாவை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம். திரிஷா சினிமாவிற்கு நடிக்க வந்து 17 ஆண்டுகள் கழிந்து விட்டன ஆனாலும் தற்போதும் கூட முன்னணி நடிகையாகவே திகழ்கிறார் திரிஷா.

தற்போது மலையாள திரைப்படமான ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார் திரிஷா இதில் இவருடன் மோகன் லால் நடிக்கிறார். பாபநாசம் மற்றும் தம்பி படங்களை இயக்கிய ஜீதுப் ஜோசப் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ராம் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல் திரிஷா ஒரு நாய்யை வைத்து கொஞ்சி கொண்டு இருக்கும் புகைபடங்கள் சமுக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. திரிஷா அந்த நாயிடம் செல்லமாக கொஞ்சி விளையாடி வருகிறார்.
இதனை பார்த்த பல பேர் திரிஷாவிக்கு நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் போல என்று பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X