Actor Suriya: கர்ணா படத்தில் திரௌபதியாக களமிறங்கும் ஜான்வி கபூர்.. அப்ப சூர்யாவுக்கு ஜோடி?
மும்பை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்து வருகின்றன. முன்னதாக அவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தவை. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் பாலாவுடன் அவர் இணைந்திருந்த வணங்கான் படம் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது அந்தப் படத்தில் அருண் விஜய் நடிக்க இயக்கி முடித்துள்ளார் பாலா.
இதனிடையே இயக்குநர் சிவா டைரக்ஷனில் கங்குவா படத்தில் இணைந்த சூர்யா, படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்களம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மிரட்டலாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 10 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யா கேரியரில் மிகவும் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக கங்குவா படம் உருவாகயுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கதை தேர்வு அவரது ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தக்கூடியவை. வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பதை வாடிக்கையாக கொண்ட அவரது நடிப்பில் அடுத்தடுத்து சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் என வித்தியாசமான ஜானர்களில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றிப்படங்களின் வரிசையில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அவரது கேரியரில் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது கங்குவா. இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கங்குவா படம்: படம் ஆகஸ்ட் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் சூர்யாவிற்கு இணையான கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. திஷா பதானிக்கு படத்தில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது புறநானூறு படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில நடிக்கவுள்ளனர். படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாலிவுட் படம் கர்ணா: உண்மை சம்பவங்களின் அடிப்படையில் புறநானூறு படத்தின் கதைக்களம் பீரியட் படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்காக தன்னுடைய லுக்கை கல்லூரி மாணவன் கெட்டப்பிற்கு மாற்றியுள்ளார் சூர்யா. அவரது சமீபத்திய புகைப்படங்கள் மாஸ் காட்டி வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா படத்திலும் சூர்யா கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நாயகி ஜான்வி கபூர் கமிட்டாகியுள்ளார். ஆனால் அவர் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியில்லை என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2வது வாரத்தில் சூட்டிங்: மகாபாரத கதைக்களத்தை மையமாக கொண்டு கர்ணா படம உருவாகவுள்ளது. படத்தில் திரௌபதி கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கான லுக் டெஸ்ட்டும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்திற்கான சூட்டிங் பிப்ரவரி 2வது வாரத்தில் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் இணைந்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











