க்யூட் ஏஞ்சலாக ஜொலிக்கும் இந்துஜா.. வர்ணித்த பிரபலங்கள்!
சென்னை : நடிகை இந்துஜா மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பிகில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் காக்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அறிமுகமான குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகை இந்துஜா இப்பொழுது செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் வர்ணித்து வருகின்றனர்.

மேயாத மான்
இயக்குனர், திரைக்கதையாசிரியர் என பன்முகங்கள் கொண்டுள்ள ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை இந்துஜா அதைத் தொடர்ந்து மெர்குரி,60 வயது மாநிறம், பில்லா பாண்டி என உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

வேம்பு
இருப்பினும் விஜய் நடிப்பில் வெளியான பிகில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த இந்துஜா
இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

முக்கிய வேடங்களில்
விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காக்கி என்ற திரைப்படத்தில் தற்பொழுது இந்துஜா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் செந்தில் குமார் இயக்க ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

க்யூட் ஏஞ்சலாக
மாடர்ன் ட்ரஸ் சேலை என எது அணிந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் இவர் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரையும் வர்ணிக்க வைத்துள்ளது. அதில் மாலை வெயில் மங்காமல் முகத்தில் பட வித்தியாசமான காஸ்ட்யூமில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள இவரை திரைப் பிரபலங்கள் வர்ஷா பொல்லம்மா, ரேபா மற்றும் ரசிகர்கள் என பலரும் க்யூட் ஏஞ்சல் என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











