Kajal Aggarwal: சினிமாவில் இருந்து விலகும் முடிவில் காஜல் அகர்வால்… காரணம் என்ன?
சென்னை : நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபலமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடந்த 2008ம் ஆண்டு பரத்திற்கு ஜோடியாக பழனி படத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற காஜல், ராம்சரணுடன் மகதீரா படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

காஜல் அகர்வால்: மகதீரா படத்தின் வெற்றிக்குப்பிறகு ஸ்டார் நடிகை என பெயர் எடுத்த காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்தார். போலீஸ் உமனாகவும், ஸ்போர்ட்ஸ் கேர்ளாகவும் இவர் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். மேலும், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
காதல் திருமணம்: படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த காஜல் 2020ஆம் ஆண்டு மும்பையில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவரின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடந்ததால், இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மீண்டும் சினிமாவில்: இதையடுத்து, கடந்த ஆண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். தனது மகனின் போட்டோவை அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார். குழந்தை பிறப்பிற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடுவார் என் சொல்லப்பட்டது. ஆனால், மீண்டும் அதே உத்வேகத்துடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
விலக முடிவு: இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கைவசம் உள்ள திரைப்படங்களை முடிந்துவிட்டு சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஜல் அகர்வால் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதாக இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,அவர் கர்ப்பமாக இல்லை என்று காஜாலின் மகன் நீல் தற்போது வளர்ந்து விட்டதால், இந்த நேரத்தில் மகனுடன் இருக்க வேண்டுமென காஜல் விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











