இந்தியர்களை கவர்ந்திழுக்கும் மேயாத மானுக்கு பர்த்டே.. வாழ்த்து மழையில் நனையும் பிரியா பவானி சங்கர்!
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி இளம் ஹீரோயினாக மாறியிருக்கும் பிரியா பவானி சங்கருக்கு இன்று பிறந்த நாள்.
ஆண்டு இறுதியில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும். அது நம்ம மேயாத மான் பிரியா பவானி சங்கருக்கு கிடைத்துள்ளது.
பிரியா பவானி சங்கரின் பிறந்த நாளை ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி தமிழ் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை பொண்ணு
சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் போல பிரியா பவானி சங்கரும் அக்மார்க் சென்னை பொண்ணு தான். 1989ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பிறந்த பிரியா பவானி சங்கருக்கு இன்றோடு 30வயசு ஆகுது.
ஸ்டைலிஷ் தமிழச்சி
கோலிவுட்டில் தமிழ் பேசும் நடிகைகள் அதிகம் சாதிக்க மாட்டார்கள் என்ற வாசகத்தை தற்போது சில நடிகைகள் உடைத்து வருகின்றனர். அதில், பிரியா பவானி சங்கரும் இடம்பிடித்துள்ளார். இந்த ஸ்டைலிஷ் தமிழச்சிக்கு ரசிகர்கள் ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
றெக்க மட்டும் இருந்தா
பிரியா பவானி சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ள இந்த ரசிகர், றெக்க மட்டும் இருந்தா என் ஆளும் தேவதை தான் டா என பதிவிட்டுள்ளார். இந்த விஷயம் பிரியாவுக்கு தெரியுமா?
வெற்றியாண்டு
மாஃபியா, இந்தியன் 2 என பல பெரிய படங்கள் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வரும் 2020ல் வெளியாகிறது. அடுத்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியாண்டாக அமைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
லட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிரியா பவானி சங்கரின் இந்த தீவிர ரசிகர், லட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
ஹேப்பி பர்த்டே க்யூட்டி
பிரியா பவானி சங்கர் இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களில் பிரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த ரசிகர், ஹேப்பி பர்த்டே கியூட்டி என தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இந்தியன் 2க்கு வெயிட்டிங்
பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் மாஃபியா மற்றும் இந்தியன் 2 படங்களுக்காக அவரது ரசிகர்கள் வெயிட்டிங்கில் காத்திருக்கின்றனர்.
எக்ஸ்பிரெஷன் குயின்
தனது அழகான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள பிரியா பவானி சங்கரை எக்ஸ்பிரெஷன் குயின் என ரசிகர்கள் குறிப்பிட்டு வாழ்த்தி வருகின்றனர். சிம்பிள் பியூட்டியாகவும், க்யூட்டாகவும் தமிழ் ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டுள்ள பிரியா பவானி சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











