Priya Bhavani Shankar: ரூ.350 என் முதல் சம்பளம்.. பிரியா பவானி சங்கர் மனம் திறந்த பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முக்கியமான நடிகர்களின் படங்களுக்கு ஜோடியாக நடித்து, கோலிவுட்டில் மிகவும் தேடப்படும் நடிகையாக இருக்கும் இவர், தான் வாங்கிய முதல் சம்பளம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சினிமா என்னும் மாய உலகில் ஜொலிப்பதற்கு லக் மிகவும் முக்கியமான ஒன்றாகும். என்னதான் அழகும், திறமையும், நடிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் லக் என்று ஒன்று இல்லை என்றால், சினிமாவில் ஜெயிக்க முடியாது. அப்படி தனக்கு என்று கிடைத்த அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கருக்கு அப்போதே இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார்.

அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பிரியா பாவனி சங்கர், மேயாத மான் படத்தில் கதாநாயகியான நடித்திருந்தார். இந்த படம் ஓரளவிற்கு ஓடியது. இதையடுத்து கார்த்திக் நடித்த கடைக்குட்டி சிங்கம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் எஸ் . ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே , பிளட் மணி, ஹாஸ்டல் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
நடிகை பிரியா பவானி ஷங்கர்: தற்போது இவர் சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். தற்போது இவர் கைவசம் இந்தியன் 2, ஜிப்ரா, ரத்னம், பீமா, டிமாண்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டும் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார். ராசியான நடிகை என பெயர் எடுத்த பிரியா பாவனி சங்கரை பல தயாரிப்பாளர்களுக்கும் பிடித்து விட்டதாம். ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கும் போதும் சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தாமல், தயாரிப்பாளர் தரும் சம்பளத்திற்கு, பேரம் பேசாமல் புன் சிரிப்போடு வாங்கிக் கொள்வதால், பிரியா பவானி சங்கர் பல தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக உள்ளார்.
என் முதல் சம்பளம்: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியா பவானி ஷங்கர், நான் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் போது எனக்கு செய்திவாசிப்பாளர் வேலை கிடைத்தது. என் கல்லூரி வண்டலூரில் இருக்கிறது அபீஸ் திநகரில் இருந்ததால், தினமும் ஒன்றரை மணி நேரம் ட்ராவல் செய்துதான் ஆபிசுக்கு போக வேண்டும். அப்போது, அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஆங்கர் ஒருவர் உங்க சம்பளம் என்ன என்று கேட்ட போதுதான், இதுக்கு சம்பளம் எல்லாம் தருவாங்களா என்று எனக்கு தோன்றியது. அதன் பின் ஹெச்ஆரிடம் கேட்டார். அவர் உடனே, இது டிரைனிங் பீரியட் என்பதால், சம்பளம் இல்லை என்று சொன்னார்கள். மூன்று மாதத்திற்கு பிறகு சம்பளம் போட்டார்கள், ஒரு நியூஸ் படிச்சா ரூ.350 ரூபாய் சம்பளமா கொடுத்தாங்க, அதுதான் நான் வாங்கிய முதல் சம்பளம், அதை இப்போது நினைத்தாலும் ரொம்ப பெருமையா இருக்கு என்றார்.


Click it and Unblock the Notifications











