ஓட்டுப் போட்ட கையோடு ஒரு வழியாக ஹனிமூன் போன ரகுல் ப்ரீத் சிங்.. கணவர் எங்கேம்மா காணோம்?
மும்பை: மே 20, 2024 திங்கட்கிழமை, மக்களவைத் தேர்தலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அவரது கணவர் ஜாக்கி பக்னானி இருவரும் தங்கள் வாக்கினை செலுத்தினர். ஓட்டுப் போட்ட கையோடு தற்போது ஹனிமூனுக்கு இருவரும் பிஜி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை உணர்த்தும் விதமாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது கோக்கோமோ பிரைவேட் தீவில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டில் திருமணத்தை நடத்த ரகுல் ப்ரீத் சிங் ஆசைப்பட்ட நிலையில், மோடியின் கோரிக்கையை ஏற்று ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானி கோவாவிலேயே பசுமைவழி திருமணத்தை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தினார். ஹனிமூனுக்காவது உடனடியாக வெளிநாட்டுக்கு போகலாம் என கனவு கண்டு கொண்டிருந்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு கணவர் தயாரிப்பில் உருவான அக்ஷய் குமார் படம் சிக்கலாக அமைந்தது.

அதன் பின்னர் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்ட நிலையில், ஜாக்கி பக்னானி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இருவரும் ஒருவழியாக வாக்கு செலுத்திய பின்னர் ஹனிமூன் சென்றுள்ளதாக தெரிகிறது.
இந்தியன் 2 ஹீரோயின்: கன்னடத்தில் 2009ல் வெளியான கில்லி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். 33 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களிலும் சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயன் உடன் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அயலான் பொங்கலுக்கு வெளியாகி ஃபிளாப் ஆன நிலையில், இந்தியன் 2 இந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. நாளை அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “பாரா” வெளியாகிறது.

கோவாவில் திருமணம்: முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கும் போதே திடீரென 33 வயதிலேயே தனது காதலர் ஜாக்கி பக்னானியை கரம் பிடித்து விட்டார் ரகுல் ப்ரீத் சிங். கோவாவில் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் பிப்ரவரி மாதம் அரங்கேறியது. திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்கை ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தினர்.

அக்ஷய் குமாரால் தடைப்பட்ட ஹனிமூன்: கோவாவில் திருமணமான கையோடு வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்ல கிளம்பிவிடுவார் ரகுல் ப்ரீத் சிங் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹனிமூன் பிளான் இல்லை என ஜாக்கி பக்னானி முடிவு செய்து விட்டார். அதற்கு காரணம் அவரது தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடித்த படே மியான் சோட்டே மியான் படத்தின் ரிலீஸ் தான் என்றனர். அந்த படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது தேர்தல் முடிந்த நிலையில், இருவரும் ஹனிமூன் சென்றுள்ளதாக கூறுகின்றனர்.

காதல் திருமணம்: அக்ஷய் குமாரின் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ஜாக்கி பக்னானி தயாரிப்பில் அக்ஷய் குமார் நடித்த ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக்கான கட்புட்லி படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். அப்போது படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
வெளிநாட்டில் ரகுல் ப்ரீத் சிங்: கோகோமோ பிரைவேட் தீவுக்கு சுற்றுலா சென்ற போட்டோக்களை சற்றுமுன் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். நீச்சல் உடையில் பீச்சில் ஜாலியாக என்ஜாய் பண்ணும் போட்டோக்களை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள நிலையில், ஓட்டுப் போட்ட கையோடு ஹனிமூனுக்கு கிளம்பிட்டீங்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
கணவர் எங்கே?: நீச்சல் உடையில் வெளிநாட்டில் ஜாலி பண்ணும் சோலோ போட்டோக்களை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள நிலையில், கணவர் ஜாக்கி பக்னானி எங்கே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஹனிமூனா? அல்லது தனி மூனா? என்றும் கலாய்த்து வருகின்றனர். சீக்கிரமே கணவருடன் எடுத்த போட்டோக்களையும் ரகுல் ப்ரீத் சிங் வெளியிடுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











