ஃபுல் ரொமான்ஸ்..புது காதலருடன் நச்சுனு லிப் லாக்.. டிரெண்டாகும் எமி ஜாக்சன் போட்டோஸ்!
சென்னை : நடிகை எமி ஜாக்சன் புது காதலர் எட் வெஸ்ட்விக்கு நச்சுனு லிப் லாக் கொடுக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது.
வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன், தமிழ் சினிமாவிக்கு வந்த குறுகிய காலத்திலேயே ஆர்யா, விஜய், தனுஷ், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
வெளிநாட்டு நடிகையான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய காதலனுடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொண்டார்.

எமி ஜாக்சன்
ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். ஹாலிவுட் மாடலான இவர், அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டிணம் படத்தின் வெள்ளைக்காரியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பே தாயானார்
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இருவரும் பிரிந்தனர்
இதையடுத்து, கடந்த வருடம் இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜார்ஜின் புகைப்படங்களையும் அவரின் பெயரை நீக்கினார். இதனால், இருவரும் பிரிந்து விட்டனர் என்பது உறுதியானது.

நச்சுனு முத்தம்
இதையடுத்து, பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். தற்போது இந்த காதல் ஜோடி, 79வது வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கான படகில் புறப்படும் முன் எமி ஜாக்சன் தனது புது காதலரான எட் வெஸ்ட்விக்கு நச்சுனு ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இணையத்தில் இந்த போட்டோவை பலர் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











