அது இல்லாமல் இந்திய வாழ்க்கையை வாழ முடியாது.. நடிகை கேத்தரின் தெரசா !

சென்னை : அர்ஜுன் ரெட்டி சாயலில் விஜய் தேவர்கொண்டா நடித்திருந்த வேர்ல்டு ஃபேமௌஸ் லவ்வர் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிகை கேத்தரின் தெரசா நடித்திருந்தார்.

தமிழில் இப்போதைக்கு எந்த படமும் கைவசம் இல்லாத இவர் தெலுங்கில் பட வாய்ப்புகளை குவித்து வருகிறார்.

அந்த வகையில் பால தண்டாணாண , பிம்பிசாரா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கேத்தரின் தெரசா அது இல்லாமல் இந்திய வாழ்க்கையை வாழ முடியாது என கூறியுள்ளார்.

பா ரஞ்சித் இயக்கத்தில்

பா ரஞ்சித் இயக்கத்தில்

கன்னடத்தில் வெளியான சங்கர் ஐபிஎஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கேத்தரின் தெரசா அதன்பிறகு தமிழில் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த மெட்ராஸ் வடசென்னை மக்களின் வாழ்க்கையை மிக அற்புதமாக காட்டி இருந்தது. இதுவரை வடசென்னையை யாரும் காட்டாத வித்தியாசமான கோணத்தில் காட்டி இருந்த இந்த திரைப்படத்தில் கேத்தரின் தெரசா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருப்பார்.

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்

மெட்ராஸ் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து கதகளி, கணிதன்,கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம் உள்ளிட்ட படங்களில் அடுத்த கேத்ரின் தெரசா கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மூன்று கதாநாயகிகள்

மூன்று கதாநாயகிகள்

அர்ஜுன் ரெட்டி வெற்றிக்கு பிறகு விஜய் தேவரகொண்ட அதே சாயலில் நடித்திருந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக கேத்தரின் தெரசா நடித்து இருப்பார். இந்த படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது.

சேலை இல்லாமல்

சேலை இல்லாமல்

இப்போதைக்கு தமிழில் எந்த ஒரு படமும் கைவசம் இல்லை என்றாலும் தெலுங்கில் பால தண்டாணாண, பிம்பிசாரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சேலையில் அம்சமாக சோபாவின் மீது படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சேலை இல்லாமல் இந்திய வாழ்க்கையை வாழ முடியாது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X