விளம்பரத்திற்காக இந்த நடிகை செய்த கூத்தை பார்த்தீங்களா?
மும்பை: பாலிவுட்டில் ஜொலிக்க போராடிக் கொண்டிருக்கும் நடிகை தனிஷா சிங் பிரபல பாப் பாடகி லேடி காகா போன்று விலங்கு இறைச்சியில் ஆடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
பிரபல பாப் பாடகியான லேடி காகா ஏதாவது வித்தியாசமான கெட்டப்பில் வருகிறேன் என்று எதையாவது செய்வது வழக்கம். இந்நிலையில் அவர் கடந்த 2010ம் ஆண்டு நடந்த எம்.டி.வி. வீடியோ மியூசிக் விருதுக்கு வந்தவர்களை அதிர வைத்தார்.
விருது விழாவுக்கு வந்தவர்கள் அனைவரின் பார்வையும் காகாவின் ஆடை மீது தான்.

மாட்டு இறைச்சி
லேடி காகா மாட்டு இறைச்சியை வைத்து ஒரு ஆடையை டிசைன் செய்து அதை விருது விழாவுக்கு அணிந்து வந்தார். அவரது இறைச்சி உடை, காலணிகள் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆர்வலர்கள்
லேடி காகா எப்படி மாட்டு இறைச்சியை ஆடையாக அணியலாம் என்று விலங்கு ஆர்வலர்கள் உலகம் முழுவதும் கண்டன குரல் எழுப்பினர்.

தனிஷா
பாலிவுட்டில் ஜொலிக்க போராடிக் கொண்டிருப்பவர் நடிகை தனிஷா சிங். அவர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க லேடி காகாவின் இறைச்சி உடையை காப்பியடித்து அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ஆட்டு இறைச்சி
காகா மாட்டு இறைச்சியில் ஆடை அணிய தனிஷா ஆட்டு இறைச்சியில் ஆடை அணிந்துள்ளார். காகாவின் உடை போன்று அதே டிசைனில் ஆடை வடிவமைத்து அணிந்துள்ளார் தனிஷா.

சைவமாம்
ஆட்டு இறைச்சியில் உடை அணிந்த தனிஷா சிங் ஒரு சைவ பிரியையாம். விலங்குகளை பாதுக்காக வலியுறுத்தி தான் இவ்வாறு உடை அணிந்தாராம்.

விளம்பரம்
போட்டிருப்பது ஆட்டு இறைச்சி உடை, இதில் தலையில் விலங்குகளை பாதுாக்கக் கோரும் வாசகம் அடங்கிய கிரீடம் வேறு. விளம்பரத்திற்காக இந்த நடிகை எப்படி எல்லாம் செய்கிறார் பாருங்கள் என்று பலரும் சிரிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











