»   »  டிவிக்கு வந்த இந்திரஜா!

டிவிக்கு வந்த இந்திரஜா!

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் அதிர்ஷடம் இல்லாமல் போனதால் டிவி பக்கம் வந்து விட்டார் இந்திரஜா.

ராஜாவின் பார்வையிலே படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் கேரளத்தை சேர்ந்த இந்திரஜா. விஜய், அஜீத்துடன்இணைந்து நடித்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவில் பெரிய அளவுக்கு இவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

தெலுங்கிலும், மலையாளத்திலும் கூட முட்டிப் பார்த்தார். முட்டிதான் பெயர்ந்ததே தவிர முயற்சிகளுக்குப்பலன் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நல்ல கிளாமர் காட்டி நயம்படத்தான் நடித்தார் இந்திரஜா.

ஆனாலும் வாய்ப்புகள் என்னவோ வரத்தான் செய்யவில்லை. இதனால் சமீப காலமாக வீட்டோடு கிடந்தஇந்திரஜாவைக் கூப்பிட்டு ராதிகா தனது சூரிய நட்சத்திரம் நிகழ்ச்சியின் காம்பியராக மாற்றியுள்ளார்.

சன் டிவியில் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது சூரிய நட்சத்திரம். இது ஒரு வித்தியாசமானகேம் ஷோ. இளைஞர்களின் திறமைகளை வெளியே கொண்டு வர உதவும் பிளாட்பார்மாக இந்த நிகழ்ச்சியைவடிவமைத்துள்ளார்களாம்.

போட்டியில் வெல்வோருக்கு ஐந்து லட்சம் வரை பரிசு தருகிறார்கள். படு கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்திவெளுத்துக் கட்டுகிறார் இந்திரஜா.

சினிமாவில்தான் களை கட்டவில்லை, ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடானுகோடி தமிழ் மக்களைஉற்சாகப்படுத்தி வருகிறார் இந்திரஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil