மகா சிவராத்திரி.. இந்திரஜாவின் நாட்டியாஞ்சலி.. அடடா.. கலக்கிட்டீங்க போங்க!

சென்னை: மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற சிவ ஆலையங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். சிவராத்திரி விழித்து இருந்து சிவனை வழிபட்டால் சகல பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் இந்த நாளில் இரவு முழுக்க நாட்டிய நிகழ்ச்சி நடக்கும். இதில், நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ நாட்டியமாடி உள்ளார்.

Maha Shivaratri Indraja Robo shankar
Photo Credit:

பார்வதி தேவி சிவனை வழிபாடு செய்த நாளே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. உலகம் எங்கும் எள்ள உள்ள சிவன் கோயில்களில் இன்று இரவு முழுவதும் 6 கால சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ராமேஸ்வரம், திருவண்னாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம், சிதம்பரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Maha Shivaratri Indraja Robo shankar
Photo Credit:

இந்திரஜாவின் நாட்டியாஞ்சலி: சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் சிவன் கோயில்கள் திறந்து இருக்கும். சிறப்பு அபிஷேங்கள் நடைபெறும். நான்கு கால அபிஷேகம் நடைபெறும். சிவராத்திரி விழித்து இருந்து சிவனை வழிபட்டால் , சகல பாக்கியங்களும் கிடைக்கும். மன அமைதி, நோய் நீங்குதல், பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி விழா 7ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிவபுரணம், தேவாரம், திருமுறைகள் பாடி நாடனமாடுவது வழக்கம். அந்த வகையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில், இந்திரஜா சிறப்பாக நாட்டியம் ஆடினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, 2022ஆம் ஆண்டு வெளியான விருமன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மாநில அரசின் சிறந்த நகைச்சுவை நடிகை விருதைப் பெற்றார். அவர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X