ரோபோ சங்கர் மகளும், மருமகனும் ஜோடியாக செய்யும் ஒர்க் அவுட்.. இவங்க வேற மாதிரி இருக்காங்களே
சென்னை: மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சில வருடங்களுக்கு முன்பு கார்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். மகன் பிறந்த சில மாதங்களிலேயே இந்திரஜா தனது தந்தையை இழந்ததால்; தன்னுடைய மகனுள் தந்தையை கண்டுகொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரும், அவரது கணவர் கார்த்தியும் போட்டிருக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த அவர் காமெடியனாகவும், குணசித்திர வேடத்திலும் கலக்கியிருக்கிறார். அவருக்கு தனுஷ்தான் முதன்முதலில் வாய்ப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே சனிக்கிழமை என்ற கேரக்டரை ஏற்று அட்டகாசப்படுத்தினார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து படு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடல்நலம் குன்றிய ரோபோ: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு மது பழக்கமும் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக உடல்நிலை ரொம்பவே மோசமானது. பிழைப்பதே கடினம் என்றெல்லாம் வதந்திகள் பரவின. எப்படியோ குடும்பத்தினர், மருத்துவர்கள், நண்பர்கள் உதவியுடன் அதிலிருந்து மீண்டு வந்து; புதிய மனிதராக ஜொலித்தார். மதுவுக்கு எதிரான விளம்பர படங்களிலும் அவர் நடித்துவந்தார். இனிமேல் அவருக்கு ஒரு பிரச்னையும் வராது என்றுதான் குடும்பத்தினர் நினைத்தார்கள்.
உயிரிழந்த ரோபோ சங்கர்: ஆனால் உடல்நலம் தேறிய சில காலத்திலேயே மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மனைவியையும், மகளையும் நிலைகுலைய செய்துவிட்டது. மகள் இந்திரஜா சில வருடங்களுக்கு முன்புதான் கார்த்தி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியதுமே தந்தை இல்லாமல் போனதால் ரொம்பவே நொந்துபோனார் இந்திரஜா.
ஒர்க் அவுட் வீடியோ: தந்தை போன பிறகு தனது மகனுக்குள் தந்தை ரோபோ சங்கரை காண்பதாக உருக்கமாகவும் ஒருமுறை தெரிவித்திருந்தார் இந்திரஜா. அண்மையில்தான் மகனுக்கு மொட்டை போட்டு காதுகுத்தி அசத்தியிருந்தார்கள் ரோபோ குடும்பத்தினர். இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது கார்த்தியும், இந்திரஜாவும் ஜோடியாக ஜிம்முக்கு சென்று கடுமையாக ஒர்க் அவுட்டுகளை செய்தார்கள். அதனை இன்ஸ்டாவிலும் பகிர்ந்திருக்கிறார்கள். அதை பார்த்த ரசிகர்கள் பரவாயில்லையே ஜோடியாகவெல்லாம் ஜிம்முக்கு சென்று உடல்நலம் மீது நல்ல கான்சியஸாக இருக்கிறார்களே என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
சினிமாவில் இந்திரஜா: முன்னதாக தந்தை ரோபோ சங்கர் போலவே இந்திரஜா சங்கரும் சினிமாவில்தான் பிஸியாக இருக்கிறார். பிகில் படத்தில் பாண்டியம்மாள் கேரக்டரில் நடித்து அறிமுகமான அவர் விருமன், அகத்தியா, கூரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிகில் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த கேரக்டரை விஜய் உருவ கேலி செய்யும்படியான காட்சி இடம்பெற்று பெரிய சர்ச்சையை அந்த சமயத்தில் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சியிலும் இந்திரஜா தலை காண்பிப்பது உண்டு. ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை காண்பித்தார். ஆனாலும் நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறிவிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications















