ஒரு ஊர்ல ரெண்டு ராஜா... லட்சுமிமேனன் பாடலுக்கு இனியா டான்ஸ் ஆடுகிறார்!
சென்னை: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் இமான் இசையில் முதன் முறையாக பாடகியாகியுள்ளார் நடிகை லட்சுமிமேனன். இந்தப்பாடலுக்கு முதலில் முன்னாள் நீலப்பட நடிகையும், தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன் ஆடுவார் என முதலில் தகவல்கள் வெளியானது.
பின்னர், அப்பாடலுக்கு சன்னி லியோன் ஆடவில்லை நீது சந்திரா ஆடுகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது சன்னி லியோனுமில்லை, நீது சந்திராவும் இல்லை அப்பாடலுக்கு நம்ம 'வாகை சூடவா' நாயகி இனியா தான் ஆடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா...
கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த் ஜோடி சேரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இப்படத்தில் இன்னொரு ராஜாவாக சூரி நடிக்கிறார்.

லட்சுமிமேனன் பாடல்...
சமீபத்தில் இப்படத்தின் பாடலொன்றை நடிகர் இமான் இசையில் லட்சுமிமேனன் பாடிக் கொடுத்தார். அப்பாடலுக்கு திரையில் யார் ஆடப்போகிறார்கள் என்பதில் மட்டும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

லாரி டான்ஸ்...
இந்நிலையில், தற்போது அப்பாடலுக்கு இனியா நடிக்கப் போவதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இப்பாடலை சென்னை - திண்டுக்கல் சாலையில் அலங்கரிக்கப் பட்ட லாரியில் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

பிருந்தா மாஸ்டர்...
இரண்டு அல்லது மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும். இப்பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் பிருந்தா இயக்குகிறார்.

ஆடை....
இனியாவிற்கு ஆபாசமில்லாத வகையில் என்னமாதிரியான ஆடை கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

முகபாவனை தேவை...
சன்னி லியோன், நீது சந்திரா பெயர்களைப் பரிசீலனை செய்த நீங்கள், கடைசியில் இனியாவைத் தேர்வு செய்ததெப்படி என்ற கேள்விக்கு, ‘நன்கு முகபாவனைகளைக் கொடுக்கும் நடிகையைத் தேடி வந்தேன்.

தேர்ந்த நடனக் கலைஞர்...
இனியா முறைப்படி நடனம் கற்றவர். எனவே, இப்பாடலுக்கு அவர் நடனமாடினால் ஆபாசமாக இருக்காது எனக் கருதியதால் அவரைத் தேர்வு செய்தேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











