என்னது ஆண்டி நடிகையா? பாடி ஷேமிங் பண்ணாதீங்க.. குண்டா இருந்தா தப்பா?.. நடிகை இனியா பதிலடி!

சென்னை: வாகை சூடவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை இனியாவிற்கு தற்போது இல்லாததால் அடல்ட் காமெடி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 13 ந்தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் இனியா அளவிற்கு அதிகமான எடையுடன் காணப்படுகிறாள். இதுகுறித்து, செய்தியாளர் கேட்க கேள்வியால் கடுப்பான இனியா அதற்கு தரமான பதிலளித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்களில் நடித்து வந்த இனியா, ஹீரோயினராக மலையாளத்தில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, தமிழில் வாகை சூடவா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற படங்களில் நடித்து வந்த இனியாவிற்கு படவாய்ப்பு இல்லாததால், அடல்ட் சமாசாரங்கள் நிறைந்த 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் த்ரிகுண் நாயகனாகவும், ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்துள்ளனர்.

Ineya interview photos
Photo Credit:

நடிகை இனியா: தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் உருவான இந்த படத்தை பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆபாச நகைச்சுவை, இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இனியா, படுக்கை அறை காட்சியில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனில் பேசிய நடிகை இனியாவிடம் செய்தியாளர், வாகை சூடாவா படத்தில் ஒல்லியாக இருந்தீங்க, இப்போ உடல் எடை அதிகரித்து ஆண்டிப்போல மாறிவிட்டீர்கள், இதனால் தான் படவாய்ப்பு வரவில்லையா என கேட்டார்.

குண்டாக இருப்பது தவறில்லை: இந்த கேள்வியால் கடுப்பான இனியா, நான் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு அண்மையில் கால் மற்றும் தோள்பட்டையில் ஒருஅறுவை சிகிச்சை நடந்ததால், என்னால் சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய்விட்டது. இதனால், உடை எடை அதிகரித்துவிட்டது. ஒரு நடிகை குண்டாகிவிட்டார் என்பதற்காக அவர் ஆன்ட்டி, அக்கா கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. குண்டாக இருப்பது தவறு பெரிய இல்லை. ஒல்லியாக இருந்த பல நடிகைகள் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள். ஆனால், நான் எப்பொழுதும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X