நயன்தாரா ரொம்ப வொர்ஸ்ட்.. ஃபெமி9 நிகழ்ச்சியில் நடந்த கூத்து.. விக்னேஷ் சிவன் இப்படி பண்ணாரா?
சென்னை: நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக தொழிலதிபராகவும் தூள் கிளப்பி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டமே தனக்கு வேண்டாம் என்றேன் என்றும் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் தொல்லையால் தான் அதை சுமந்துக் கொண்டு இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். தனுஷ் உடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு நயன்தாராவை சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவிட்டிகளும் அவரை பற்றிய அவதூறு கருத்துக்களும் அதிகம் உலா வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற Femi9 நிகழ்ச்சியில் நயன்தாரா மிகவும் மோசமாக நடந்துக் கொண்டார் என இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் டாக்குமென்டரி மட்டுமே வெளியானது. அந்த ஆவணப்படத்தை சுற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட நடிகை நயன்தாரா “யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும், நாம் அதையெல்லாம் முறியடித்து மேலே எழுந்து வர வேண்டும்” என அங்கே வந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் சிலருக்கு உள்குத்தாகவும் பேசியிருந்தார்.
நயன்தாரா ரொம்ப வொர்ஸ்ட்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் 6.30 மணிக்கு படப்பிடிப்பு என்றால் பங்சுவாலிட்டியை பின்பற்றி 6 மணிக்கே செட்டுக்கு வந்துவிடுவார் என்கின்றனர். லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நேற்று காலை 9 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் என சொல்லிவிட்டு மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்தார் என்றும் 1 மணிக்கு முடியும் என்று கூறப்பட்ட நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத்தான் நிறைவடைந்தது என்றும் நயன்தாரா ரொம்பவே வொர்ஸ்ட் என இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டிட்யூட் காட்டிய விக்னேஷ் சிவன்: அங்கே வந்த நயன்தாரா நல்ல கருத்துக்களை பேசினார். பல டிஸ்ட்ரிப்யூட்டர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். கடைசியாக போட்டோக்கள் எடுக்கும் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் இன்ஃப்ளூயன்ஸர்களை பார்த்து உங்களுக்கு எல்லாம் என்ன இப்போ போட்டோ தானே எடுக்கணும். வந்து எடுத்துக்கோங்கன்னு ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டி பேசியது பலரையும் கடுப்பில் ஆழ்த்தியது. மத்தவங்க இதை சொல்வாங்களான்னு தெரியல. ஆனால், ரெண்டு பேருமே சொன்னபடி நிகழ்ச்சியை நடத்தவில்லை. அங்கே வந்தவர்கள் பலரது மனம் காயப்பட்டது. இதை நான் சொல்வதில் எனக்கு எந்தவொரு பயமும் இல்லை என பேசியுள்ளார்.
திட்டமிட்டே நெகட்டிவிட்டி: நடிகை நயன்தாராவுக்கு எதிராக சிலர் திட்டமிட்டே நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றனர் என்றும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பலர் எந்தவொரு குறையும் சொல்லாத நிலையில், இந்த இன்ஃப்ளூயன்சர் இப்படி வீடியோ போட யாரிடம் எவ்வளவு அமௌண்ட் வாங்கினார் என நயன்தாராவின் ரசிகர்கள் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











