Samantha Birthday - ரியல் எஸ்டேட் முதல் ப்ளே ஸ்கூல்வரை - சமந்தாவுக்கு இத்தனை தொழில்களா?

சென்னை: Samantha Birthday (சமந்தா பிறந்தநாள்) நடிகை சமந்தா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவர் செய்யும் பிற தொழில்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்திவந்தார். அப்படி அவர் நடித்த படங்களுக்கும் நன்றாகவே வரவேற்பு கிடைத்தது.

Information about Samanthas other occupations has been revealed

பிரிவு: இருவரது திருமண வாழ்க்கையும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த சூழலில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக இருவருமே அறிவித்தனர். இதற்கு பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன. ஆனால் தங்களது பிரிவு குறித்து இரண்டு பேருமே அமைதியாக இருந்தார்கள். திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு சமந்தாவால் திரையுலகில் நிச்சயம் நிலைக்க முடியாது அவரது கிராஃப் இறங்கிவிடும் என சிலர் ஆரூடம் கூறினர்.

அடித்து நொறுக்கிய சமந்தா: ஆனால் அவர்களின் ஆரூடத்தை அடித்து நொறுக்கும் விதமாக திருமண முறிவுக்கு பிறகு படங்களில் கமிட்டானார் சமந்தா. குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் போட்ட நடனம் அவருக்கு மேற்கொண்டு ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் ஹிந்தி வெப் சீரிஸிலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.

நோய்: சூழல் இப்படி இருக்க சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அதற்காக அவர் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். ஒருவழியாக சிகிச்சையை முடித்து அதிலிருந்து மீண்ட சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தை பெற்றது. மேலும் பத்து கோடி ரூபாய்கூட இந்தப் படம் வசூலிக்கவில்லை என தகவல் வெளியானதை அடுத்து சமந்தாவின் கேரியரில் மோசமான தோல்வி படமாக இது கருதப்படுகிறது.

Information about Samanthas other occupations has been revealed

சமந்தா பிறந்தநாள்: இந்நிலையில் சமந்தா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள்வரை பலரும் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். மேலும் பல இன்னல்களை சந்தித்தாலும் தனித்து தெரியும் ஹீரோயின் என்றும் அவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்துவருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சமந்தா செய்துவரும் பிற தொழில்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமந்தாவின் பிற தொழில்கள்: அதன்படி, சமந்தா ரியல் எஸ்டேட்டில் அதிகளவு முதலீடு செய்திருப்பதாகவும், அதன் மூலம் வந்த வருவாயில் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் கட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சூப்பர் ஃபுட் நிறுவனத்தில் அவர் செய்திருக்கும் முதலீடு மூலம் வருடம் 1 மில்லியன் டாலருக்கும் மேல் சம்பாதிக்கிறாராம். அதேபோல் சாக்கி எனும் ஃபேசஹன் பிராண்ட் ஒன்றையும், ப்ளே ஸ்கூல் ஒன்றையும் சொந்தமாக நடத்திவருகிறாராம் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X